தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 3

போலந்து திரைப்படமான 'பெர்ஃபெக்ட் நம்பர்'- இன் சர்வதேச பிரீமியர் காட்சியோடு 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவுற்றது

"பொருள் உலகத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளும் உண்டு என்பதைக் குறிப்பதற்கான முயற்சி இந்தத் திரைப்படம்.", என்று பெர்ஃபெக்ட் நம்பர் திரைப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோஃப் ஜானுஸ்ஸி கூறினார். 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், பொருள் உலகத்திற்கு அப்பால் வேறு உண்மை இருக்கலாம் என்று கூறினார்.

“இந்த நியூட்டன் சகாப்தம் எல்லாம் முடிந்துவிட்டது, 19-ஆம் நூற்றாண்டில் மிகவும் உறுதியாக இருந்த இந்த விஷயங்கள் அனைத்தும் இனி நிச்சயமற்றவை என்பதை நமக்கு உணர்த்தும் குவாண்டம் இயற்பியல் இருப்பதால், பொருள் உலகத்திற்கு அப்பால் வேறு உண்மை இருக்கலாம்  என்பதை விஞ்ஞானம் மறுக்கவில்லை. இவை அனைத்தும் இப்போது கேள்விக்குறியாக உள்ளது. இவையே இந்த கதையை எழுத என்னை தூண்டியது”, என்று கூறினார்.

போலந்து திரைப்படமான இந்த 'பெர்ஃபெக்ட் நம்பர்'- இன் சர்வதேச பிரீமியர் காட்சியோடு  53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவுற்றது.

இந்தத்திரைப்படம், இயற்பியலின் வரம்புகளைத் உடைக்க குவாண்டம் இயற்பியல் மற்றும் கால்குலஸின் கணிதக் கோட்பாடுகளில் தத்துவ பதில்களை தேடுகிறது. அப்போது விஞ்ஞானம் மெய்ஞானத்தை சந்திக்கிறது. ஒரு இளம் கணிதவியலாளன் நீண்ட காலமாக தொலைந்து போன தனது உறவினரைச் சந்திக்கிறான். அந்த உறவினர் மிகவும் செல்வந்தணாக உள்ளது. இவர்களின் சந்திப்பு எவ்வாறு அவர்களின் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் மாற்றுகிறது என்பதே இத்திரைப்படம்.

தான் இத்திரைப்படத்தை உருவாக்குவதற்ககான ஊக்கியாக இருந்த நிகழ்வைப்பற்றி கிரிஸ்டோஃப் ஜானுஸ்ஸி பகிர்ந்துக்கொண்டார். “இது ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், ரஷ்ய-யூதரான ஒரு கணிதவியலாளர் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்றார். காசோலை தனது கவனத்தை சிதறடிக்கிறது, கவனத்தை தான் சிதறடிக்க விரும்பவில்லை என்று கூறி அதை திருப்பி அனுப்பினார். இதில் ஈர்க்கப்பட்டே நான் இந்த படத்தை எடுத்தேன்.”, என்று அவர் கூறினார்.

 

சரியான எண்ணைப் பற்றி:

இயக்குனர்: கிரிஸ்டோஃப் ஜானுஸ்ஸி

தயாரிப்பாளர்: ஸ்பிக்நியு டொமாகல்ஸ்கி, ஃபெலிஸ் ஃபரினா, பாவ்லோ மரியா ஸ்பினா

திரைக்கதை: கிரிஸ்டோஃப் ஜானுஸ்ஸி

ஒளிப்பதிவாளர்: பியோட்டர் நீமிஸ்கி

தொகுப்பாளர்: மிலேனியா ஃபீட்லர்

நடிகர்கள்: ஆண்ட்ரூ செவெரின், ஜான் மார்செவ்ஸ்கி

************

GS / SRI / DL

iffi reel

(Release ID: 1879661) Visitor Counter : 152