தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 4

ஐஎப்எப்ஐ-ன் சர்வதேச போட்டி நடுவர் குழு பத்திரிகையாளர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்தது

திரைப்பட விழாவின் முக்கிய நோக்கம்  திரைப்படங்களைத் திரையிடுவது மட்டுமல்ல. மாறாக பல்வேறு அம்சங்களை இதில் கொண்டுவருவதுமாகும்  என்று 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குனரும், எழுத்தாளரும், சர்வதேச போட்டி நடுவர் குழுவின் தலைவருமான நடவ் லாபிட் கூறினார். திரைப்பட விழாவையொட்டி பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவர் ஊடக செய்தியாளர்கள்  மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.

இப்போது பல திரைப்பட விழாக்கள் கலப்பு முறையில் நடத்தப்பட்டாலும், பெரிய திரையில் படங்களைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கிறது என்று நடவ் லாபிட் கருத்து தெரிவித்துள்ளார். "ஒரு பெரிய திரையில் ஒன்றாக நல்ல திரைப்படங்களைப் பார்ப்பது மனிதகுலத்தின் மிக உயர்ந்த சாதனைகளில் ஒன்றாகும்" என்று அவர்  கூறினார்.

 ஒவ்வொரு திரைப்பட விழாவும் தனித்துவமாகவும், அதன் சொந்த வழியில் வித்தியாசமாகவும் இருப்பதால், அவற்றை ஒப்பிடுவது கடினம் என்று கூறிய அவர், சர்வதேச போட்டிப் பிரிவில் திரைப்படங்களின் தரம் குறித்து நடுவர் மன்றம் திருப்தியை வெளிப்படுத்தியது, ஆனால் தேர்வில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டது என்றார்.

ஃபிரான்ஸைச் சேர்ந்த நடுவர் குழு உறுப்பினரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான ஜேவியர் அங்குலோ பர்டுரன், கூட்ட நெரிசலான அரங்கங்களையும், சினிமாவைப் பற்றி நிறைய பேர் விவாதிப்பதையும் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார். மக்கள் பெரிய திரைகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

சிறந்த திரைப்படங்கள் விழாவிற்கு வருவதை உறுதிசெய்ய, நிரந்தர புரோகிராமரை நியமிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் செயல்முறை தேவை என்று இந்தியாவைச் சேர்ந்த நடுவர் குழு உறுப்பினர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சுதிப்தோ சென் பரிந்துரைத்தார். இந்த ஆண்டு ஒரு முழுமையான 360 டிகிரி திரைப்பட விழாவை ஏற்பாடு செய்ததற்காக அமைப்பாளர்களை அவர் பாராட்டினார். "இது நான் பார்த்ததிலேயே சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஐஎப்எப்ஐ ஆகும். ஒரு நாடாக இந்தியாவின் பன்முகத்தன்மை, நிறம் மற்றும் விளக்கக்காட்சி அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது. விழாக்களின் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண் டு பார்க்கையில்  பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இணையாக உள்ளது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.  ஒரு திருவிழாவாக இது முதிர்ச்சியுடன் பரிணமித்துள்ளது,” என்று சுதிப்தோ சென் கூறினார்.

திரைப்படங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பைப் பற்றி பேசுகையில், நடுவர் குழு உறுப்பினரும், பிரான்சைச் சேர்ந்த திரைப்பட ஆசிரியருமான பாஸ்கேல் சாவன்ஸ், பல நல்ல பெண் நடிகர்களைப் பார்த்திருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்கள் அவ்வளவு கௌரவமானவை அல்ல என்று கூறினார். சர்வதேச போட்டி நடுவர் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பாளரான ஜின்கோ கோடோவும் இடம்பெற்றிருந்தார். உரையாடலில் இணைந்த என்எப்டிசி நிர்வாக இயக்குநர் ரவீந்தர் பாக்கர், 2022 நவம்பர் 28 ஆம் தேதி காலை பனாஜியில் உள்ள மிராமர் கடற்கரையில் தொடங்கும் கடற்கரை தூய்மை இயக்கத்துடன் ஐஎப்எப்ஐ  தொடர்புடையது என்றார்.

இந்த ஆண்டு, சர்வதேச போட்டியில் தங்க மயிலுக்கு பதினைந்து படங்கள் போட்டியிடுகின்றன. சிறந்த திரைப்படம் தவிர, சர்வதேச போட்டி நடுவர் குழு சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (ஆண்), சிறந்த நடிகர் (பெண்) மற்றும் சிறப்பு ஜூரி விருதுகளை தேர்ந்தெடுக்கும். ஒரு இயக்குனரின் சிறந்த அறிமுக திரைப்படத்தையும் நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்.

**************

SM / PKV  / DL

iffi reel

(Release ID: 1879350) Visitor Counter : 182