தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அகாடமி வண்ண குறியீட்டு அமைப்புமுறை குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வு
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் அகாடமி வண்ண குறியீட்டு அமைப்புமுறை (Academy Colour Encoding System-ACES) குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வை பிரபல வண்ண அறிவியலாளர் திரு ஜோவாச்சிம் செல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் திரு ஸ்டீவ் டாபன்கின் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஏ.சி.இ.எஸ் அமைப்புமுறையுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் பற்றி திரு ஜோவாச்சிம் செல் விரிவாக எடுத்துரைத்தார். ஏ.சி.இ.எஸ் என்பது திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தயாரிப்பின் வாழ்நாள் முழுவதும் வண்ணத்தை நிர்வகிப்பதற்கான தொழில் தரமாகும்.
இந்த அமைப்புமுறை பற்றி பேசிய திரு ஸ்டீவ் டாபன்கின், ஏ.சி.இ.எஸ் என்பது டிஜிட்டல் பட கோப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், வண்ணங்களின் மேலாண்மையிலும், தொகுக்கப்படாத, படமாக்கப்பட்ட காட்சிகளை உருவாக்குவதற்குமான சர்வதேச தரநிலை என்று கூறினார்.
**************
SM / BR / DL
(Release ID: 1879302)
Visitor Counter : 162