தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஆனந்த் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் மாற்றுத்திறனாளி பிரிவில் பிரிமியர் காட்சியாக திரையிடப்பட்டது
மாற்றுத்திறனாளி திரைப்பட ஆர்வலர்கள் உள்பட அனைவரும் திரைப்படங்களை அணுகும் வகையில், இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் திரைப்படம் இன்று விழாவின் மாற்றுத்திறனாளி பிரிவில் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது..
விழாவில் கலந்து கொண்ட பிரபல மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, ஃபிலிம் ஜியோ ஸ்டுடியோவின் கிரியேட்டிவ் இயக்குநர் திரு சஞ்சய் ராம் ஆகியோரை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவீந்தர் பாகர் பாராட்டினார். விழாவை அனைவரும் அணுகும் வகையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சிறப்பான ஏற்பாடு செயதுள்ளதை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.
படத்தைத் தயாரித்துள்ள ஃபிலிம் ஜியோ ஸ்டுடியோஸின் கிரியேட்டிவ் டைரக்டர் திரு சஞ்சய் ராம், "இன்றைய அணுகல் தரநிலைகளின்படி மேலும் பல படங்களை உருவாக்க முயற்சிப்போம்" என்றார்.
சினிமாவை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய பாதையாக மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், சிறப்புத் திறன் கொண்ட பார்வையாளர்களுக்கான பிரத்யேகத் திரையிடல்கள், அவர்களின் அணுகல் தேவைகளை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. . இந்தப் பிரிவில் உள்ள திரைப்படங்களில் உட்பொதிக்கப்பட்ட வசனங்கள் மற்றும் ஆடியோ விளக்கங்கள் உள்ளன. மேலும் படத்தின் உள்ளடக்கம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, தி ஸ்டோரிடெல்லர் தவிர, ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி இந்த ஆண்டு உட்பொதிக்கப்பட்ட ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகிறது.
பின்னணி:
இந்தியாவில் போக்குவரத்து, பொது இடம், சுற்றுலா இடங்கள், சர்வதேச விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றை அனைவருக்கும் ஏற்ற விதத்தில் மாற்றும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
படம் பற்றி:
தாரிணி ரஞ்சன் பந்தோபாத்யாய், ஒரு சிறந்த கதைசொல்லி, எந்த வேலையிலும் ஒட்டாமல் தனது வாழ்க்கையை கழித்து வருபவர். இப்போது 60 வயதில், கொல்கத்தாவில் ஓய்வாக இருப்பவருக்கு ஒரே வருத்தம். அவரது மறைந்த மனைவி அனுராதாவுக்கு அவள் எப்போதும் விரும்பிய விடுமுறையைக் கொடுக்க அவரால் ஒருபோதும் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை. இப்போது திடீரென்று, வேலையின்றி, அவருக்கு உலகில் எல்லா நேரமும் இருக்கிறது, ஆனால் அவருக்கு அருகில் இருப்பவர்கள் அவருக்கு நெருக்கமாக இல்லை.
**************
SRI / PKV / DL
(Release ID: 1879171)