தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையை திரையிடுகிறது ‘ரெட் ஷூஸ்’ திரைப்படம்

“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. இது என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கைத்தட்டல்களை விட கலைஞர்களின் தனிப்பட்ட பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது”, மெக்சிகன் திரைப்படமான ரெட் ஷூஸின் (ஜபடோஸ் ரோஜோஸ்) இயக்குனர் கார்லோஸ் ஐசெல்மேன் கைசர் கூறினார். தயாரிப்பாளர்கள் அலெஜான்ட்ரோ டி இகாசா மற்றும் கேப்ரியேலா மால்டோனாடோ மற்றும் முன்னணி நடிகை நடாலியா சோலியன் ஆகியோருடன், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்திய ‘டேபிள் டாக்ஸ்’ அமர்வில் ஊடக பிரதிநிதிகளுடன் உரையாடும்போது அவர் இதை அதேரிவித்தர்.

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான சர்வதேசப் போட்டிப் பிரிவின் கீழ் போட்டியிடும் 15 படங்களில் மெக்ஸிகோவைச் சேர்ந்த ரெட் ஷூஸும் ஒன்று.

தனிமையில் வாழும் ஒரு விவசாயியின் வாழ்க்கை மற்றும் அவரது மகள் இறந்த செய்தி கிடைத்ததும் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றி இந்த கதை சுழல்கிறது. விவசாயி தனது மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வர, அறிமுகமில்லாத மற்றும் அன்னிய உலகில் தான் செல்ல முயற்சிப்பதை இக்கதை சித்தரிக்கிறது. பல விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தயாரிப்பாளர் அலெஜான்ட்ரோ டி இகாசா கூறுகையில், படத்தில் ஒரு அற்புதமான கதை உள்ளது. "தொற்றுநோயின் போது நாங்கள் இத்திரைப்படத்தை எடுத்ததால் படப்பிடிப்பு சிக்கலாக இருந்தது என்றாலும், கார்லோஸுடன் பணியாற்றியது நன்றாக இருந்தது" என்று அவர் கூறினார்.

அறிமுக நடிகையாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நடாலியா சோலியன், தான் எப்போதும் ஒரு திரைப்படத்தில் நடிக்க விரும்பியதாகவும், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்று கூறினார். “டச்சோ ஒரு இயல்பான நடிகர் என்பதால் அவருடன் பணியாற்ற ஆர்வமாக இருந்தேன். இயக்குனருக்கு தெளிவான மனநிலை கொண்டவர். இந்த திரைப்படம் ஒரு சிறப்பான அனுபவமாக எனக்கு இருந்தது”, என்று கூறினார்.

**************

PKV / SRI / DL

iffi reel

(Release ID: 1879165) Visitor Counter : 143