விவசாயத்துறை அமைச்சகம்

ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் 24.13 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது: மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர்

Posted On: 26 NOV 2022 3:04PM by PIB Chennai

ரபி பருவகால பயிர் வகைகள் உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் 24.13 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

ரபி பருவகால பயிர் வகைகளின் கையிருப்புநிலை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய திரு.நரேந்திர சிங் தோமர், கடந்த வருட கோதுமை உற்பத்தி 138.35 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்து 152.88 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது கோதுமை உற்பத்தி 14.53 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 4 வருடங்களில் மிகப்பெரிய உற்பத்தி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி 25.11.2022 வரையில் 358.59 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலவேளையில் உற்பத்தியின் அளவு 334.46 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்தது. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24.13 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகமாகும். இது வழக்கமான ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி அளவில் சுமார் 57 சதவீதம் ஆகும்.

மண் ஈரப்பதநிலை, நீர்த்தேக்க வசதி மற்றும் உரங்களின் கையிருப்பு போன்ற காரணிகள் சாதகமான சூழ்நிலையில் அமைந்திருப்பதால், வரும் நாட்களில் ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும் என்று திரு.தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 143 முக்கிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 149.49 பில்லியன் கன மீட்டர் அளவாகும். இது கடந்த காலத்தைவிட 106 சதவீதம் அதிகமானதாகும். கடந்த 7 ஆண்டுகளில் தற்போதுதான் மண் ஈரப்பதநிலை நல்ல பதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு நிலையும் திருப்திகரமாக உள்ளது.

                                **************



(Release ID: 1879099) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia