தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

"கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு நாம் ஆராய முயல்கிறோம்": இயக்குனர் ஆண்ட்ரியா பிராகா

கோவாவில் நடைபெற்று  வரும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை த்கவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த  ’டேபிள் டாக்ஸ்' நிகழ்ச்சியில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆண்ட்ரியா ப்ராகா 'செஃல்ப் டிபன்ஸ்' படம் பற்றி பேசுகையில், "படத்தின் மையக் கருப்பொருள், நமது விவசாயத் துறையில் உள்ள நச்சுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நமது வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன என்று கூறினார்.

திரைப்படத்தின் கதாநாயகன் பல வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பும்போது அது உச்சக்கட்டத்தை நோக்கியதாக இருக்கிறது. கடந்த கால நினைவுகள் அவன் கண் முன்னே பளிச்சிடுகின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு  நாம் ஆராய முயல்கிறோம். ஒரு முழு நீள திரைப்படத்தின் படப்பிடிப்பு குறும்படங்களின் படப்பிடிப்பிலிருந்து வேறுபட்டதல்ல என்று அவர் கூறினார்.

படத்தின் படத்தொகுப்பாளர்  மொரிசியோ ஹாலெக், தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு,  ”நாங்கள் நண்பர்களாக இருப்பதால், இந்த திட்டத்தில் பணியாற்றுவது ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது. இந்தியாவில் ஒரு திரைப்படத்தை நாங்கள் திரையிடுவது இதுவே முதல் முறை” என்றார்.

கோவாவில் நடைபெற்று வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘ஒரு இயக்குனரின் சிறந்த அறிமுக திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் ஸ்பானிய திரைப்படமான ‘செல்ஃப் டிஃபென்ஸ்’ திரையிடப்பட்டது.

கதைச்சுருக்கம்:

எட்வர்டோ, தீர்க்கப்படாத கடந்தகால சிக்கல்களைக் கொண்ட ஒரு வழக்குரைஞர். தொடர்ச்சியான கொலைகளை விசாரிக்க தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்கிறார். சில பழைய நண்பர்கள் அவரை வரவேற்கிறார்கள்.

விசாரணை வளர்ச்சியடையும்போது, மிகவும் மோசமான நிலையில் வாழும் உள்ளூர் மக்களின் இழப்பில் வேளாண் இரசாயனங்களின் துஷ்பிரயோகம் பற்றி தெரியவருகிறது.

 

நடிகர்கள் & குழுவினர்:

இயக்குனர்: ஆண்ட்ரியா பிராகா

தயாரிப்பாளர்: ஆண்ட்ரியா பிராகா

திரைக்கதை: ஆண்ட்ரியா பிராகா

ஒளிப்பதிவாளர்: கில்லர்மோ “குரி” சபோஸ்னிக்

ஆசிரியர்: மொரிசியோ ஹாலெக்

நடிகர்கள்: அல்போன்சோ டார்ட் (எட்வர்டோ பாஸ்டோர்), ஜேவியர் ட்ரோலாஸ் (ரமிரோ சர்டோரி), வயோலெட்டா உர்டிஸ்பீரியா (பவுலா பென்னாட்டி)

 

இயக்குனர் பற்றி:

ஆண்ட்ரியா பிராகா 1986 இல் இத்தாலியின் ப்ரெசியாவில் பிறந்தார். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அவர் யுனிவர்சிட்டா டெல் சாக்ரோ டி ப்ரெசியாவின் இலக்கியம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றுள்ளார், மேலும் எஸ்குவேலா புரொஃபெஷனல் டி சினி டி எலிசியோ சுபீலா (புவெனஸ் அயர்ஸ்) ஒளிப்பதிவு செய்துள்ளார். 2014 முதல், அவர் திரைப்படம் மற்றும் இசை வீடியோ தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறார். ஒரு இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அவரது வாழ்க்கையானது கற்பனையான குறும்படங்களான ஈவ்லின் (2015) மற்றும் மெமோரியா இன்டர்னா (2017) ஆகியவற்றுடன் தொடங்கியது, விருதுகள் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகிய இரண்டும் வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் திரைப்படத்தை உருவாக்கினார்.

**************

SM / PKV / DL

iffi reel

(Release ID: 1878980) Visitor Counter : 174