தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிக்க ஓடிடி தளங்கள் வழிவகுத்தன: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் முகேஷ் சாப்ரா
இந்தியத் திரைப்படத் துறையில் நடிகர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை மிகவும் பழைமையானது என்றும், நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையேயான இணைப்பாக நடிப்பு தேர்வு இயக்குனர் செயல்படுகிறார் என்றும் இத்துறைக்கான இயக்குநர் முகேஷ் சாப்ரா கூறினார். முன்பெல்லாம் இயக்குனர்கள் யார் கிடைக்கிறார்களோ அவர்களை நடிக்க வைத்தனர், ஆனால் இப்போது இந்த செயல்முறை மிகவும் தொழில்முறையாகிவிட்டது என்றார் அவர்.
53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் ‘புதிய இந்திய சினிமாவில் நடிப்பு’ என்ற தலைப்பில் “உரையாடல்” நிகழ்ச்சியில் முகேஷ் சாப்ரா கலந்து கொண்டார்.
இந்தியத் திரையுலகில் நடிகர்கள் தேர்வுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கு உந்து சக்தியாக விளங்கும் முகேஷ் சாப்ரா, க்ஷிதிஜ் மேத்தா ஆகியோர் இதில் பேசினர். நடிகர்கள் தேர்வு செயல்முறையின் பரிணாமம், இந்தியத் திரைப்படத் துறையில் நடிப்புத் துறையில் ஓடிடி தளங்களின் தாக்கம், ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு ஆகியவற்றில் அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்தின் தாக்கம் குறித்து பேசிய முகேஷ் சாப்ரா, இவற்றின் அதிகரிப்பு நடிப்புத் துறையில் வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்றார்.
படங்களில் மிகச் சிறிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் மற்றும் ஷோக்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்பதால், இவற்றுக்கு வரவேற்பு காணப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
நடிகர்களுக்கான பயிற்சி பட்டறைகளை நடத்துவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் விவரித்த முகேஷ் சாப்ரா, இந்தப் பட்டறைகள் படத்தில் வாய்ப்புகளையும், புதிய நடிகர்கள் சிரமமின்றி செயல்படவும், அவர்களை பாத்திரத்திற்குத் தயாராகவும் வைக்கும் வகையிலும் நடத்தப்படுகின்றன. அவை நடிகர்களை மேலும் தயார்படுத்துவதற்கும் சீர்ப்படுத்துவதற்கும் உதவுகின்றன. பட்டறைகளை நடத்துவது பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட க்ஷிதிஜ் மேத்தா, இந்த செயல்முறையின் மூலம் செல்லாமல் யாராவது வெற்றியை அடைந்தால், அவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர மாட்டார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்தால் வித்தியாசத்தை உணருவார்கள் என்று கூறினார். இது நீண்ட காலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
**************
SM / PKV / DL
(रिलीज़ आईडी: 1878970)
आगंतुक पटल : 221