தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

தெருவில் வசிப்பவர்களின் சுகாதார பிரச்சனைகளை அலசும் மராத்தி படம் ‘ரேகா’

மராத்தி மொழிப் படமான ரேகா, 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா கதை அல்லா பிரிவின் கீழ் வியாழனன்று திரையிடப்பட்டது. தெருவில் வசிப்பவர்களின் அன்றாடப் போராட்டங்கள், அவர்களின் சுகாதாரம் மற்றும் தூய்மைப்  பிரச்சினைகள், அவர்கள் மீதான   சமூகத்தின் கண்ணோட்டம் பற்றி  இத்திரைப்படம் அலசுகிறது. இத்திரைப்படத்தின் இயக்குனர் சேகர் பாபு ரன்காம்பே, “தெருவில் வசிப்பவர்களின் குறிப்பாக பெண்களின் சுகாதாரப் பிரச்சினைகளை, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை இப்படம் சித்தரிக்கிறது’’ என்று கூறினார்.  ‘’ஒன்றரை ஆண்டுகளாக இதுபற்றி ஆராய்ச்சி செய்தபோது, அவர்களின் உண்மை நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பல மாதங்களாக அவர்கள் குளிக்க முடியாமல் இருப்பதையும் காணமுடிந்தது'' என்றார்.

கதாநாயகி ரேகா சாலையோரத்தில் வசிக்கிறார். பூஞ்சை தோல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, குளித்துவிட்டு மருந்து தடவுமாறு மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஆனால் அவளது கணவன் அவளைத் தடுத்து நிறுத்தி அவளை மோசமாக நடத்துகிறான். ரேகா குளிக்க முயல்கிறாள், ஆனால் அவளது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அவளிடம் வேண்டாம் என்ற காரணத்தைக் கூறும்போது அதிர்ச்சியடைந்து, அவள் கணவனை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். சுத்தமாக இருக்க அவள் படும் கஷ்டங்களை படம் சித்தரிக்கிறது.

 

மகாராஷ்டிராவின் வாகா (நாடக ) கலைஞர்களைக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை கேமராக்களை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவர்களுக்கு கேமரா முன் நடிப்பது குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் இரண்டு மாத கால பயிலரங்கம் நடத்தப்பட்டது. சாங்லியில் வசிக்கும் சேகர் பாபு ரன்காம்பே, இன்று பத்திரிகை தகவல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  "டேபிள்-டாக்ஸ்" அமர்வில் பேசும் போது, இந்த திட்டத்தில் உதவியதற்காக புகழ்பெற்ற மராத்தி இயக்குனர் ரவி ஜாதவ்க்கு தான் கடன்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும், திரைப்படங்களில் இடம்பிடித்ததற்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மாயா பவார் மற்றும் தமினா பவார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

**************

AP/PKV/KRS

iffi reel

(Release ID: 1878939) Visitor Counter : 213