கலாசாரத்துறை அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு விருதுகள் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
25 NOV 2022 6:18PM by PIB Chennai
75 ஆண்டு இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், 75 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகளை சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த 6 முதல் 8ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்ற சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்தக் கலைஞர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும், தாமிரப்பத்திரமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சாள்புரம் சின்னத்தம்பி( நாதஸ்வரம்), புருசை சுப்பிரமணியம் ( தெருக்கூத்து), சுந்தரேசன் ராமமூர்த்தி( நாடக நடிகர்), வி.ஏ.கே.ரங்காராவ் ( நடன இசை), பி.ரமணி (வீணை இசை) ஆகிய கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த நாடக இசைக் கலைஞர் கே.எம்.சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞர் வீராசாமி சீனிவாசன் ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முழு விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878896
**************
AP/PKV/KRS
(रिलीज़ आईडी: 1878933)
आगंतुक पटल : 217