தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சிக்மண்ட் பிராய்ட் மற்றும் கொரிய திரைப்படங்களின் உந்துதலே ஃபிக்சேஷன்; இயக்குனர் மெர்சிடிஸ் பிரைஸ் மோர்கன்
இந்தியாவின் 53-வது சர்வதேச திரைப்பட விழாவின் மிட் பெஃஸ்ட் படமாக , மெர்சிடிஸ் பிரைஸ் மோர்கன் இயக்குனராக அறிமுகமான ஃபிக்சேஷன் திரைப்படத்தின் சர்வதேச பிரிமீயர் காட்சியை திரையிட்டது. இது ஒரு உளவியல் த்ரில்லர் திரைப்படமாகும்.
கோவா திரைப்பட விழாவையொட்டி பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ நிகழ்ச்சியில் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடிய ஃபிக்சேஷன் இயக்குனர் மெர்சிடிஸ் பிரைஸ் மோர்கன், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் அவரது பிரபல நோயாளி டோராவைப் பற்றிய ஆய்வால் ஈர்க்கப்பட்ட படம் என்று கூறினார். ஃபிக்சேஷன் ஐரோப்பிய மற்றும் கொரிய திரைப்படங்களில் இருந்து உந்துதலைப் பெற்றது என்று அவர் கூறினார்.
உளவியல் திரைப்படங்கள் மீதான தனது காதலை வெளிப்படுத்திய மெர்சிடிஸ் பிரைஸ் மோர்கன், பார்வையாளர்களை முழு நேரமும் யூகித்துக்கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், கதாபாத்திரங்களுடன் வாழத் தூண்டுவதாகவும் கூறினார்.
உரையாடலின் போது உடனிருந்த திரைப்படத்தின் முன்னணி தயாரிப்பாளரான மேக்ஸ் டாப்ளின், ஃபிக்சேஷன் ஒரு சோதனைப் படத்திற்கும் ஹாலிவுட் பிளாக்பஸ்டருக்கும் இடையிலான ஒரு நல்ல கலவையாகும் என்றார். "இது ஒரு பரிசோதனையாக இருந்த போதிலும், வணிகரீதியிலான வெகுஜன மார்க்கெட் படத்திற்கான அனைத்து கூறுகளும் இதில் உள்ளன. அதில் இருந்து விலகிப் பார்க்க முடியாது, ”என்று அவர் விளக்கினார்.
சுதந்திரமான திரைப்படம் எடுப்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், தனக்கு இந்த விஷயத்தில் அவநம்பிக்கை இல்லை என்றார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் கத்ரீனா குட்லிக் மற்றும் மாயா ஹெபல் ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.
படச்சுருக்கம்
வழக்கத்திற்கு மாறான கொலை வழக்கின் தண்டனைக்கு முன்பாக, ஒரு இளம் பெண் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகிறாள். ஆனால் சோதனைகள் மிகவும் அச்சுறுத்தும் போது, அவள் மருத்துவர்களின் உண்மையான நோக்கங்களை கேள்வி கேட்க ஆரம்பிக்கிறாள். மேடி ஹாசன், டோரா என்ற இளம் பெண்ணாக நடித்துள்ளார்.
இயக்குனர் பற்றி;
மெர்சிடிஸ் பிரைஸ் மோர்கன் ஒரு விருது பெற்ற லத்தீன் இயக்குனர். மெர்சிடிஸின் முதல் திரைப்படமான ‘ஃபிக்ஸேஷன்’ டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அவர் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு தொடர்களையும் மெர்சிடிஸ் இயக்கியுள்ளார்.
**************
AP/PKV/KRS
(रिलीज़ आईडी: 1878888)
आगंतुक पटल : 184