தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
தெய்வீக ஆற்றல் கொண்ட மனிதனுக்கும், பிரபலமான நடிகருக்கும் இடையே உள்ள முரண்பாட்டை ‘ரிகர்சல்’ திரைப்படம் விளக்குகிறது
புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்ஷேவின் கூற்றுப்படி, எதிர்காலத்தில் ஒரு யதார்த்தமான இலக்கை விட ஒரு இலட்சியத்தைக் கொண்ட மனிதனின் தொடர்ச்சியே தெய்வீக ஆற்றல் கொண்ட மனிதனாவான். சூஃபி தத்துவத்திலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச பனோரமா பிரிவின் கீழ் திரையிடப்பட்ட ரிகர்சல் (ஒத்திகை) திரைப்படத்தின் கதைக்களம் இந்த அடிப்படைத் தத்துவத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.
இன்று நடைபெற்ற "டேபிள் டாக்ஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படத்தின் இயக்குனர் குஸ்னோரா ரோஸ்மாடோவா, இந்த படம் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் தெய்வீக ஆற்றல் கொண்ட மனிதன் என்னும் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது என்றார். ஒரு தியேட்டரில் பணிபுரியும் கதாநாயகனைக் கொண்டு தெய்வீக ஆற்றல் கொண்ட மனித இயக்கவியலை காண்பிக்கிறது. ஒரு உயர்ந்த மனிதனின் பிறப்பைப் பற்றி இது விவரிக்கிறது. ஒரு உயர்ந்த மனிதன் பிறக்கும்போது, மக்கள் அடக்குமுறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காப்பாற்றப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்திய சினிமா குறித்த கேள்விக்கு பதிலளித்த குஸ்னோரா, ராஜ் கபூரின் படங்களின் பாடல்கள் உஸ்பெகிஸ்தானில் மிகவும் பிரபலம் என்று கூறினார். உஸ்பெகிஸ்தானில் அதிக பெண் திரைப்பட தயாரிப்பாளர்கள் இல்லை என்றும் சமீப நாட்களில் இந்த போக்கு மெதுவாக மாறி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
படம் பற்றி
அசல் தலைப்பு: Repititsiya
இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்: குஸ்னோரா ரோஸ்மாடோவா
தயாரிப்பாளர்: ருஸ்தம் ஜமிலோவ்
ஆசிரியர்: திமூர் கியாசோவ்
நடிகர்கள்: தோஹிர் சைடோவ், எல்மிரா ரஹீம் ஜோனோவா, ஜரிஃபா ஜி’அஃபுரோவா, முஸ்லிமா முஹம்மதி யேவா
கதை சுருக்கம்: ஓர்சு தியேட்டரில் வேலை செய்கிறார். ஆபிரகாம் இஸ்மாயீலை பலியிட வழிவகுத்த மதக் கதையைக் குறிப்பிடும் ஒரு பழைய ஜெப ஆலயத்திலிருந்து படம் தொடங்குகிறது.
**************
SRI/ PKV / DL
(Release ID: 1878693)
Visitor Counter : 213