தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
2015 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டு அகதிகள் சந்தித்த பிரச்சனைகளை தத்ரூபமாக விளக்கும் பிஹைன்ட் தி ஹேஸ்டாக்ஸ் திரைப்படம்
கடந்த 2015 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் ஐரோப்பிய நாடுகள் இரு புறமும் போக்குவரத்தை தடை செய்தபோது, அகதிகள் எதிர்கொண்ட மாபெரும் சவால்களை வெளிப்படுத்தும் சமூக திரைப்படமாக கிரேக்க மொழியில் வெளியான தி ஹேஸ்டாக்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த தடை காரணமாக வடக்கு கிரீஸ் எல்லைப்பகுதியில் அகதிகளும், குடிபெயர்பவர்களும் இதனால் சந்தித்த பிரச்சனைகளை விளக்குவதாக இந்த படம் உள்ளது.
இந்த திரைப்படம் 53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படங்கள் வரிசையில் இன்று முதல் முறையாக திரையிடப்பட்டது. பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஐஎஃப்எஃப்ஐ டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில் இயக்குநரும், திரைக்கதை வசனகர்த்தாவுமாகிய அஸிமினா ப்ரோட்ரூவ் பேசுகையில், ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகள் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் மனஓட்டத்தை மையக்கருவாக கொண்டு விவரிக்கிறது இந்த திரைப்படம் என்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்த திரைப்படத்தில் இந்த மூன்று பேரும் ஏன் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிப்பணிய வேணடியது இருக்கிறது. அவர்கள் ஏன் இவ்விதமாக நடந்துகொள்கிறார்கள்? என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
மாறுபட்ட எண்ண ஓட்டத்தில் இருக்கும், இந்த மூன்று பேரும், எவ்வாறு, லஞ்சத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் கதையின் முக்கிய அம்சம். அதேநேரத்தில், ஏன் இந்த மூன்றுபேரும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள் என்ற வியப்பை, ரசிகர்கள் மத்தியில் விதைப்பதுதான், எங்கள் நோக்கமாக இருந்தது. படத்தின் தொடக்கத்தில் இந்த வியப்பு ஏற்பட்ட போதிலும், கடைசியில் அந்த 3 கதாபாத்திரங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது. ஒரு குடும்பத்தைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது என்ற போதிலும், இந்தக் குடும்பத்தின் பின்னணி உலகறிந்ததே, என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே இந்த கதையின் சாராம்சம் என்றும், இந்தப் பிரச்னையால் அந்த 3 கதாபாத்திரங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கிரீஸ் நாட்டு மக்கள், அகதிகள் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு உதவ முன்வந்தவர்களும், பிரதிபலனாக அகதிகளிடம் பணம் பெற்றுக்கொள்வதையும், பழமைவாதத்தை போதிக்கும் தேவாலயம், பெரும்பாலான நேரங்களில், அகதிகள் அபாயகரமானவர்கள் என நாட்டு மக்களிடம் தவறாக சித்தரிப்பதையும் இந்த திரைப்படம் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் ஒவ்வொரு நாளும் எப்படி லஞ்சத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை அணு அணுவாக சித்தரிக்கிறது என்றார்.
கதை சுருக்கம் : கிரீஸ் நாட்டு எல்லைப் பகுதியில் நடுத்தர வயதுகொண்ட கடனாளி மீனவர், அதிகக் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு, எல்லைப்பகுதியில் உள்ள ஏரி வழியாக, அகதிகளைக் கடத்தும் பணியைச் செய்கிறார். இவரது மனைவி, இறைவனின் வார்த்தையில் உண்மையை தேடும் தேவாலய விஸ்வாசி. இவரது மகள், வாழ்க்கையை தனக்கே உரித்தான பாணியில் இட்டுச்செல்ல ஆசைப்படும் பெண். இந்த மூன்று பேரும் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோபாவங்களை வெளிப்படுத்துவதையும், வாழ்க்கையில் முதன் முறையாக தங்களுடைய செயல்களுக்கான பலனை அனுபவிப்பதையும் இந்த திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
நடிகை எவ்ஜெனியா லாவ்டா, அந்த வித்தியாசமான மகள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இதில் என்னுடைய வயதிற்கேற்ற பாத்திரத்தை ஏற்கவில்லை என்றபோதிலும், இந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் நடித்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
**************
SM/ES/RS/KRS
(Release ID: 1878668)