தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பீகாரின் மைதிலி மொழி திரைப்படமான லோட்டஸ் ப்ளூம்ஸ், தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாசப்பிணைப்பை பெருமளவில் சைகை மொழியில் விவரிக்கும் கதை
ஒரு தனிப்பட்ட நபரின் உணர்ச்சிகரமான வாழ்க்கைப் பயணத்தை இயற்கையும், பொதுமக்களும் சாட்சிகளாக விளங்க விவரிக்கப்பட்ட கதையாக லோட்டஸ் ப்ளூம்ஸ் அமைந்திருப்பதாக அதன் இயக்குநர் பிரதீக் ஷர்மா கூறியுள்ளார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில் பேசிய அவர், தனது கதையை பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து நகர்த்தி செல்ல விரும்பியதாக கூறியுள்ளார்.
இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய அஸ்மிதா ஷர்மா கூறுகையில், மனிதனின் வாழ்வில் இயற்கை என்ன திட்டமிட்டிருக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சித்தரிப்பதுதான், லோட்டஸ் ப்ளூம்ஸ் திரைப்படத்தின் மையக்கருத்து என்ற போதும். அந்த திட்டம், சில வேளைகளில் எதிர்பாராத விதமாகவும் அமையலாம் என்பதையும், பல நேரங்களில் மனிதனின் எண்ணம் பலிக்காமலும் போகலாம் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார். சில தருணங்களில் இயற்கையின் இந்த பயணம் சிரமங்கள் நிறைந்த்தாக இருக்கக் கூடும். ஆனால், இயற்கையிடமும், படைத்தவனிடமும் நாம் முழுஅளவில் சரணாகதி அடையும்போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாமே எதிர்பாராத வகையிலான விசித்திரமான வழிகளில் தீர்வு கிடைக்கலாம் என்றார்.
பிரபல கதாநாயக நடிகர் அகிலேந்திர சத்ரபதி மிஷ்ரா கூறுகையில், இந்த படத்தில் திரைமொழிக்காகவே இந்த திரைப்படத்தை தேர்வு செய்தேன். என்றும், வாழ்க்கை என்பது தாமரையைப் போன்றது, அது சூரியன் உதிக்கும்போது மலர்ந்தும், அஸ்தமனத்தில் வாடி விடுவதையும் சித்தரிக்கும் வகையில் கதைக்கரு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், பீகாரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பேசும் மைதிலி மொழியை முன்னிறுத்தவே இந்த திரைப்படத்தில் பணியாற்றினேன் என்றும், பெரும்பாலும் பிராந்திய மொழி திரைப்படங்கள், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், பிராந்திய மொழியை முன்னிறுத்தும் திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வாழ்வின் நீட்சியே திரைப்படம் என்றும், திரைப்படங்கள் நாம் சந்திக்கும் நிகழ்வுகளை அபரிமிதமான அளவில் நம் கண்முன்னே சித்தரிக்கும் பணியை செய்து வருவதாக கூறினார். ஏனெனில், கலாச்சாரம், மொழி மற்றும் ஆன்மீக பார்வையையும், மொழியின் நவரசங்களையும் திரைப்படம் மனிதர்களின் மனங்களில் விதைக்கிறது என்றார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தின் பெயர்: லோட்டஸ் பிளூம்ஸ்
இயக்குநர்: பிரட்டிக் ஷர்மா
தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா: அஸ்மிதா ஷர்மா
கதாநாயகர்: அகிலேந்திர சத்ரபதி மிஷ்ரா.
குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் அத் ஷர்மா
கதைசுருக்கம்:
இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையேயான நம்பிக்கை மற்றும் அடிப்படை நற்பண்புகளை விவரிக்கிறது. ஒருவரின் ஆத்மாவிற்கும், இயற்கை அன்னைக்கும் உள்ள தொடர்பே வாழ்விற்கு வசந்தத்தை அளிக்கும். மிகக்குறைந்த உரையாடல்களை கொண்டு பீகார் மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், பெரும்பாலான பகுதி செய்கை சமிக்ஞைகளை உள்ளடக்கியது.
*************
SM/ES/RS/KRS
(Release ID: 1878643)
Visitor Counter : 194