தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
எனது குழந்தைப் பருவத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் உந்தப்பட்டு யங் ஆர்சனிஸ்ட்ஸ் திரைப்படத்தை எடுத்தேன்: இயக்குநர் ஷீலா பை
கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா என்ற பிரிவில், யங் ஆர்சனிஸ்ட்ஸ் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகம் மற்றும் பிரதிநிதிகள் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அப்படத்தின் இயக்குநர் ஷீலா பை, எனது குழந்தை பருவத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் உந்தப்பட்டு யங் ஆர்சனிஸ்ட்ஸ் திரைப்படத்தை எடுத்ததாக கூறினார். தமது வாழ்க்கையில் சந்தித்த நிஜ மனித கதாபாத்திரங்களை இப்படத்தில் இடம்பெற செய்ததாக தெரிவித்தார்.
கனடாவில் வெறுமையான ஒரு நிலப்பரப்பில் வேளாண் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளம்பெண்கள் தங்களது சுவாரஸ்யமற்ற வாழ்க்கை முறையிலிருந்து மீள்வதற்காக வெளியேறுகிறார்கள். கைவிடப்பட்ட ஒரு பண்ணை வீட்டை தங்களுடையதாக்கி கொண்டு, அதீத ஆர்வமும், ஒருவர் மீது ஒருவருக்கான அதீத பற்றுதலும் கொண்ட ஒரு பிணைப்பை அவர்கள் ஏற்படுத்தி கொள்வதன் காரணமாக, அவர்களது உள்மன அச்சங்களும், விருப்பங்களும் அவர்களின் ஒரே பாதுகாப்பான வசிப்பிடத்தை அழிப்பதற்கு அடிகோலுகிறது.
படத்தில் காட்டப்பட்டிருந்த பாழடைந்த பண்ணை வீட்டைப் பற்றி ஷீலா பை குறிப்பிடுகையில், சிறுவயதில் பொழுதுபோக்கிற்காக கிராமப்புறங்களில் இருக்கும் பாழடைந்த வீடுகளுக்குள் உடைத்து நுழைவது வழக்கம் என்று கூறினார். "அச்சம், உற்சாகம், ஆச்சரியம் மற்றும் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் ஆகிய உணர்வுகளை தாம் அனுபவிக்க விரும்பியதாக அவர் தெரிவிக்கிறார். என்னுடைய முதலாவது குறும்படத்தை 18-ஆவது வயதில் எடுத்தபோது, ஒரு காமிராவுடன் பாழடைந்த வீட்டிற்குள் புகுந்து மிகுந்த ஆர்வத்துடன் படம் பிடித்தது தன்னுடைய ஏனைய பிற்கால படங்களுக்கான உந்துதலாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
கனடா கோதிக் இலக்கியத்தின் மீதான தனது காதலின் அடிப்படையில் இப்படத்திற்கான கலை வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பொருளாதார நெருக்கடிகள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கும், அதன் உயிரோட்டத்திற்கும் வடிகால்களாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
**************
SM/IR/KG/KRS
(Release ID: 1878642)
Visitor Counter : 182