சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஆந்திரா மற்றும் தெலங்கான மாநிலங்களுக்கு ரூ.523 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஒப்புதல்

Posted On: 24 NOV 2022 2:06PM by PIB Chennai

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் பூபாளப்பட்டினம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு வழி சாலையை, ரூ.136 கோடி செலவில் மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த நடவடிக்கை தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு  இடையேயான  சாலை இணைப்பை மேம்படுத்தும் எனவும் குறிப்பாக, முழுகு மாவட்டத்தில் இடதுசாரி அதி தீவிரவாத்தை கட்டுப்படுத்த அரசுக்கு பேருதவியாக இருக்கும் என்றும்   தெரிவித்துள்ளார்.

இதேபோல், தெலங்கானா  மாநிலத்தின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே தனித்துவம் வாய்ந்த பாலம் அமைத்தல், நெடுஞ்சாலையை (என்எச்-167கே) மறுசீரமைத்து தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளுக்கு  ரூ.436 கோடி  நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹைதராபாத் முதல் திருப்பதி, நந்தியாலா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் 80 கிலோ மீட்டர் அளவுக்கு குறையும். நந்தியாலா நகரம் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் வன பொருட்கள் வர்த்தகத்தின் மையமாக திகழ்வதால், கொல்லாப்பூரில் பாலம் அமைப்பது தெலங்கானா மற்றும் ஆந்திரா இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என்றும் நிதின் கட்கரி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

**************

(Release ID: 1878505)

SM/ES/RS/KRS



(Release ID: 1878552) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi , Telugu