தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘சியா’ - ஒரு கொடூரமான சமூக அமைப்பை எதிர்த்து நீதிக்காகப் போராடும் ஒரு பெண்ணின் மனதை உலுக்கும் கதை
‘சியா’ என்பது நமது சமூக நீதி அமைப்பை பிரதிபலிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படம். அநீதி இழைக்கப்பட்ட தனிநபர்களின் மனிதாபிமானப் பக்கத்தை சித்தரிக்கும் முயற்சி இது. கொடூரமான ஆணாதிக்க அமைப்பை எதிர்த்து நீதிக்காகப் போராடும் ஒரு பெண்ணின் மனதை உலுக்கும் ‘சியா’ திரைப்படத்தின் இயக்குனர் மனீஷ் முந்ராவின் வார்த்தைகள் இவை. ஆன்கோன் தேக்கி, மாசான், நியூட்டன் போன்ற சிறந்த படங்களைத் தயாரித்த மனீஷ் முந்ரா, ‘சியா’ படத்திற்காக முதன்முறையாக இயக்குனரின் தொப்பி அணியும் சிறப்பைப் பெற்றுள்ளார்.
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) ஏற்பாடு செய்திருந்த 'டேபிள் டாக்ஸ்' அமர்வு ஒன்றில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடிய, மனீஷ் முந்ரா, இந்தப் படம் வலியைப் புரிந்துகொள்வதற்கான உண்மை முயற்சி என்றார். பாதிக்கப்பட்டவர்கள் நீதியைத் தேடும் தங்கள் பயணத்தில் செல்கிறார்கள். "பாதிக்கப்பட்டவர்களின் அதே வலியையும் வேதனையையும் நாம் அனைவரும் உணர வேண்டும், இது பொறுப்பான குடிமக்களாக இருக்க நமக்கு உதவும்," என்று அவர் கூறினார்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் திகில் மற்றும் வலிகளை எடுத்துரைக்கும் ‘சியா’, வட இந்தியாவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின் நீதிக்காகப் போராடும் நிஜ வாழ்க்கை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட படம். அவள் நீதிக்காகப் போராடத் துணிந்தாள், சக்தி வாய்ந்தவர்களின் கைப்பொம்மையாக மாற்றப்பட்ட குறைபாடுள்ள நீதி அமைப்புக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்கினாள்.
'சியா' திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அவரது தெரிவு குறித்து கேட்டபோது, "நான் திரைப்படங்களை தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். வணிக ரீதியான வசூல் படங்களை நான் தேடுவதில்லை. என் இதயத்தையும் ஆன்மாவையும் தொடும் கதைகளைத்தான் நான் தேர்வு செய்கிறேன். ஒரு கதை பார்வையாளர்களின் ஆன்மாவை அசைக்க வேண்டும்" என்று மனீ ஷ் முந்ரா தெரிவித்தார்.
**************
SRI/SMB/DL
(Release ID: 1878366)