தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியன் பனோரமாவின் (கதை அல்லாத திரைப்படங்கள்) ஜூரி உறுப்பினர்கள் இஃப்பி 53 ல் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்

கோவாவில் நடைபெறும்  53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (இஃப்பி) இந்தியன் பனோரமாவின் (கதை அல்லாத திரைப்படங்கள்) ஜூரி உறுப்பினர்கள் இன்று நவம்பர் 21, 2022 அன்று  ‘டேபிள் டாக்ஸில்’ கலந்து கொண்டனர்.

ஜூரி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தேர்வு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்த  7 உறுப்பினர்கள் குழுவின் தலைவரும் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளருமான ஒய்னம் டோரன், "15 நாட்களில், நாங்கள் 242 படங்களைப் பார்த்தோம், 20 ஐத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு மன அழுத்தமான ஆனால் பொழுதுபோக்கு செயல்முறையாக இருந்தது" என்றார்.

பங்கேற்றவற்றில்  சிறந்த சிலவற்றை ஒருமனதாகத் தெரிவுசெய்ய அவர்கள் எவ்வாறு  தங்கள் நிலையில் உறுதியாக நின்றார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்ட ஒய்னம் டோரன், சினிமாபாணி, அழகியல் மற்றும் வியத்தகு சிறப்புகள் நிறைந்த சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுப்பதே தங்கள் முயற்சி என்றார். 

ஜூரி உறுப்பினர்கள்

1.    திரு  ஒய்னம் டோரன்; திரைப்பட தயாரிப்பாளர்

2.    திரு  சந்திரசேகர் ஏ; திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர் மற்றும் ஊடகக் கல்வியாளர்

3.    திரு ஹரீஷ் பிமானி, திரைப்பட தயாரிப்பாளர், வசனகர்த்தா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் நடிகர்

4.    திரு மனீஷ் சைனி; திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் எடிட்டர்

5.    திரு பி. உமேஷ் நாயக்; திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்

6.    திரு ராகேஷ் மிட்டல்; திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்

7.    திரு சன்ஸ்கர் தேசாய்; திரைப்பட தயாரிப்பாளர், வசனகர்த்தா, கல்வியாளர்

53 வது இஃப்பி-யின்  இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்படுவதற்காக, 242 சமகால இந்திய கதை அல்லாத திரைப்படங்களில் தகுதியான 20 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆவணப்படுத்தவும், புலனாய்வு செய்யவும், மகிழ்விக்கவும் மற்றும் சமகால இந்திய விழுமியங்களை பிரதிபலிக்கவும், வளர்ந்து வரும் மற்றும் நன்கு பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர்களின் திறனை, கதை அல்லாத திரைப்படங்களின் தொகுப்பு எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878226

**************


(रिलीज़ आईडी: 1878346) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi