தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய அரங்கின் (கதைசார்ந்த திரைப்படங்கள்) ஜூரி உறுப்பினர்கள் ஊடகங்களுடன் உரையாடினர்
இஃப்பி-53 இல் திரையிடுவதற்காக 25 இந்திய பனோரமா திரைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன
திரைப்படங்கள் இந்திய சினிமாவின் பன்முகத்தன்மையையும் நேர்த்தியையும் பிரதிபலிக்கின்றன
இருளர் மொழி திரைப்படம் முதல் முறையாக இஃப்பி-ல் திரையிடப்படுகிறது
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (இஃப்பி) இந்தியன் பனோரமாவில் திரையிடுவதற்காக 400 படங்களிலிருந்து 5 மையநீரோட்ட திரைப்படங்கள் உட்பட மொத்தம் 25 திரைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன என்று இந்தியன் பனோரமாவின் (ஃபீச்சர் பிலிம்ஸ்) ஜூரி உறுப்பினர் வினோத் கணத்ரா தெரிவித்தார்.
கோவாவில் இன்று நடைபெற்ற ‘IFFI டேபிள் டாக்ஸ்’ நிகழ்ச்சியில் பேசிய தலைவர், அனைத்துப் படங்களும் மிகவும் ஜனநாயக மற்றும் வெளிப்படையான நடைமுறை மூலம் தெரிவுசெய்யப்பட்டதாக கூறினார். “ஜூரி உறுப்பினர்கள் இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை, அழகு மற்றும் நேர்த்தியை பிரதிபலிக்கும் சுமார் 400 படங்களை ஒரு மாத காலம் பார்த்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளரின் மனம் மற்றும் சிந்தனையைப் பரிசீலித்து, நியாயமான முறையில் திரைப்படங்களைத் தெரிவுசெய்துள்ளோம்” என்றும் தலைவர் கூறினார்.
“எல்லா தடைகளையும் பாகுபாடுகளையும் கடந்து சினிமா அதன் சொந்த மொழியைப் பேசுகிறது. அனைத்து உறுப்பினர்களின் கருத்து மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், மேலும் கருத்து சுதந்திரம் தேர்வு செயல்பாட்டில் நியாயப்படுத்தப்பட்டது” என்று ஜூரி உறுப்பினரும் தெலுங்கு திரைப்பட இயக்குநருமான வி என் ஆதித்யா ஊடகங்களுடன் உரையாடும் போது கூறினார்.
ஜூரி உறுப்பினர் அசோக் காஷ்யப் கூறுகையில், இந்தியாவையும், நமது மொழி, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவதே உறுப்பினர்களின் நோக்கம் என்றார். "இந்தத் திரைப்படங்கள் இஃப்பி-ல் ஒரு மினி இந்தியாவைக் காண்பிக்கும். மற்றவற்றுடன், முதன்முறையாக கேரளாவின் பழங்குடி மொழியான இருளா திரைப்படமும் இஃப்பி-ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
மற்றொரு ஜூரி உறுப்பினரான விஷ்ணு ஷர்மா கூறுகையில், திரைப்படங்களைப் பார்த்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைத்தது தனிப்பட்ட மற்றும் கூட்டு அனுபவமாக இருந்தது என்றார்.
பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புத் திரைப்பட ஜூரிக்கு, புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், எடிட்டரும், 9 தேசிய மற்றும் 36 சர்வதேச விருதுகளைப் பெற்றவருமான வினோத் கணத்ரா தலைமை தாங்கினார். பல்வேறு பாராட்டப்பட்ட திரைப்படங்கள், திரைப்பட அமைப்புகள் மற்றும் தொழில்களை தனித்தனியாக பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பு நடுவர் குழு அமைக்கப்பட்டது, அதே சமயம் பணக்கார மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்திய திரைப்பட சகோதரத்துவத்தை கூட்டாக பிரதிநிதித்துவம் செய்கிறது.
ஜூரி உறுப்பினர்கள்
1. வினோத் கணாத்ரா (தலைவர் )
2. ஏ.கார்த்திக்ராஜா
3. டாக்டர் அனுராதா சிங்
4. ஆனந்த ஜோதி
5. அசோக் காஷ்யப்
6.எனுமுள பிரேம்ராஜ்
7. எம்.கீதா கூரப்பா
8. ஜுகல் தேவதா
9. சைலேஷ் தவே
10. ஷிபு ஜி. சுசீலன்
11. விஷ்ணு ஷர்மா
12.வி என் ஆதித்யா
13.இமோ சிங்
இஃப்பி-ன் போது திரையிட 5 முக்கிய திரைப்படங்கள் உட்பட மொத்தம் 25 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 400 சமகால இந்தியத் திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஃபீச்சர் பிலிம்களின் தொகுப்பு இந்தியத் திரைப்படத் துறையின் துடிப்பு மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது.
*****
(Release ID: 1878177)
(Release ID: 1878342)
Visitor Counter : 159