தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வெளியீடுகள் பிரிவு அதன் இலக்கியப் பொக்கிஷத்தை 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு கொண்டு வருகிறது
2022 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் நாட்டின் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்பட விழாவான 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீடுகள் பிரிவு, அதன் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை பெருமையுடன் காட்சிப்படுத்துகிறது. கோவா ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெறும் மெகா நிகழ்வில் இந்த பிரிவு ஒரு கண்காட்சியாளராக பங்கேற்கிறது. அதுமட்டுமல்லாமல், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்பாடு செய்துள்ள ஃபிலிம் பஜாரிலும் வெளியீடுகள் பிரிவு பங்கேற்கிறது. அங்கு அதன் விற்பனை மற்றும் கண்காட்சி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, வெளியீடுகள் பிரிவு பார்வையாளர்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்பாளர்களின் மனதைக் கவரும் வகையில், இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புத்தகங்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய சினிமா, கலை மற்றும் கலாச்சாரம், புகழ்பெற்ற ஆளுமைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் பற்றிய வெளியீடுகள் பிரிவின் புத்தகங்களை ஆராய்வதற்கான வாய்ப்பையும் சினிமா ஆர்வலர்கள் பெறுவார்கள்; குடியரசுத் தலைவர் மாளிகை குறித்த புத்தகங்கள் மற்றும் பிரதமரின் உரைகள் பற்றிய புத்தகங்கள் வெளியீடுகள் பிரிவால் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீடுகள் பிரிவின் கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் ஜிங்கா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆஸாதி குவெஸ்ட்’ விளையாட்டுகள் ஆகும். மேட்ச் 3 மற்றும் ஹீரோஸ் ஆஃப் பாரத் ஆகிய மொபைல் போன் விளையாட்டுகள் , இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரமிக்க பங்களிப்புகளைப் பற்றி விளையாடுவோர்க்கு அறிவூட்டும் வகையில், பொழுதுபோக்கு மற்றும் கல்வித் திறன் கொண்டவை.
வெளியீடுகள் பிரிவு அதன் வெளியீடுகளை இ1 பெவிலியன், ப்ரோமனேட், ஃபிலிம் பஜார், ஐஎப்எப்ஐ-ல் 2022 நவம்பர் 20 முதல் 24 வரையிலும், கோவா ஐநாக்ஸ் திரையங்கில் 2022 நவம்பர் 20 முதல் 28 வரையிலும் காட்சிப்படுத்துகிறது.
**************
PKV/SRI/DL
(Release ID: 1878146)
Visitor Counter : 157