தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பில் எப்போதும் உள்ள போக்கு உணர்வுபூர்வமான கதைசொல்லல்: ஐஎப்எப்ஐ மாஸ்டர் வகுப்பில் குங் பூ பாண்டா உருவாக்கிய மார்க் ஆஸ்போர்ன்

Posted On: 22 NOV 2022 4:01PM by PIB Chennai

அனிமேஷன் படங்களுக்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றாலும், அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பில் எப்போதும் காணப்படும் மிகப்பெரிய பாணி உணர்ச்சிகரமான கதைசொல்லல் ஆகும் என்று அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும் அனிமேட்டருமான மார்க் ஆஸ்போர்ன் கூறினார். இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, ‘அனிமேஷன் அஸ் எ டூல் ஃபார் எக்ஸ்பிரஷன்’ என்ற தலைப்பிலான மாஸ்டர் கிளாஸ் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கினார்.

ஓடிடி தளங்கள் அதிகரித்து வரும் நிலையில்,  உலகளாவிய ரசிகர்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது வழக்கமான மரபாக இருக்கப்போகிறது. ஆனால், படம் மக்களுடன் இணைக்கப்பட்டு அவர்களின் இதயங்களைத் தொட வேண்டும்" என்று அவர் கூறினார். இதுபோன்ற உள்ளடக்கத்தை உருவாக்க, உங்களுக்கு எது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று அவர் மேலும் கூறினார். "இது உங்களுக்கு முக்கியமானது என்று, நீங்கள் அதைப் பற்றி நேர்மையாக இருந்தால், உங்கள் பார்வையாளர்களைக் கண்டுபிடிப்பீர்கள். நேர்மை ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்குகிறது, ”என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அனிமேஷனின் ஆற்றலை வலியுறுத்திய மார்க், அனிமேஷன் என்பது எந்தக் கதையையும் சொல்லக்கூடிய பரந்து விரிந்த த ஊடகம் என்று கூறினார்.  “இல்லாத ஒன்றைப் பற்றி யாரோ ஒருவரை உணர வைப்பது உண்மையிலேயே அற்புதமானது. இது மீண்டும் எழுதுதல், மறுகட்டமைத்தல் மற்றும் பரிசோதனையின் தொடர்ச்சியான செயல்பாட்டின் விளைவாகும். அனிமேஷனின் மாயாஜாலத்தை நீங்கள் பார்க்கும்போது அது இறுதியில் உயிர்ப்பிக்கப்படுவதை நாங்கள் உணர்கிறோம்’’ என்று அவர் கூறினார்.

 “அனிமேஷனைப் பொறுத்தவரை, திரைக்கதையை கடைசி தருணம் வரை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. அது பரிணமித்து மாறப் போகிறது. காட்சி ஊடகமாக இருப்பதால், திட்டத்தில் நிறைய வேலைகளைச் செய்ய காட்சி ஊடகத்தை அனுமதிக்க வேண்டும்," என்று மார்க் ஆஸ்போர்ன்  விளக்கினார்.

கேள்விகளுக்கு பதிலளித்த மாஸ்டர் அனிமேட்டர், ஒவ்வொரு அனிமேட்டருக்கும் தங்களுக்குள் இருக்கும் கதைகளை வெளிக்கொணர ஒரு ஆதரவு அமைப்பு தேவை என்றார். “கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஆதரிப்பது அற்புதங்கள் நடக்க உதவும். அனிமேஷனை உருவாக்க கலைஞர்களுக்கு பாதுகாப்பான இடம் தேவை” என்று அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம் மற்றும் வாழ்க்கை அனுபவம் இருக்கும். இந்தத் தனிப்பட்ட பயணத்தையும் அனுபவத்தையும் திரைப்படத் தயாரிப்பில் கொண்டு வருவது மிக முக்கியமானது என்று கூறிய மார்க் ஆஸ்போர்ன், Antoine de Saint-Exupéry எழுதிய நாவலைத் தழுவி The Little Prince திரைப்படத்தை உருவாக்குவதில் தனது பயணம் குறித்து விரிவாக விளக்கினார். இந்த அமர்வை ப்ரோசென்ஜித் கங்குலி நெறிப்படுத்தினார்.

சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்  ஆகியவை இணைந்து மாஸ்டர் வகுப்புகள் மற்றும் உரையாடல் அமர்வுகளுக்கு  கூட்டாக ஏற்பாடு செய்கின்றன. திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் மாணவர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் மாஸ்டர் வகுப்புகள் மற்றும் உரையாடல்களை உள்ளடக்கிய மொத்தம் 23 அமர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றன.

**************

 

SG/PKV/RS/KRS



(Release ID: 1878059) Visitor Counter : 142