தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மீம் போட்டி: அனைவரும் பங்கேற்கலாம்
53-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, மீம் போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறது. காண்பதெல்லாம், கேட்பதெல்லாம் போதுமானதாக இல்லை. நமது உற்சாகம் முழுமை அடையவில்லை. திரைப்படங்களை காண்பதன் மூலம் நமது ஆர்வம் குறையவில்லை. மேன்மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.
இந்த திரைப்பட திருவிழாவில், திரையிடப்படும் திரைப்படங்களின் அழகிய வடிவியலை அனைவரும் கண்டு ரசித்து வியக்கின்றனர். அதில் பலர், அரியப்படைப்புகளை தந்த கலைஞர்களின் சவால்கள், நம்பிக்கைகள் குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த திருவிழாவில், அந்த கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. மக்களின் பங்களிப்பை அதிகரிக்க இந்த மீம் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த மீம் போட்டியின் விதிமுறைகள்:
- உங்களின் தனித்துவமான கலை ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். மிக சிறந்த மீம்களை உருவாக்குங்கள். அந்த மீம்களை பார்த்து, மக்கள் தங்களது கவலைகளை மறந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த வேண்டும்.
- மீம்கள் மூலம் மக்களுக்கு திரைப்படங்கள் மீதான அன்பு அதிகரிக்க வேண்டும்.
- சமூக ஊடக தளங்களில் மீம்களை பதிவேற்றுங்கள்.
- மீம்களை உருவாக்கும் போது உங்களது தனித்துவமான கலையார்வம் வெளிப்படும் விதமாக இருக்கவேண்டும்.
- இந்த போட்டிக்கு இறுதிநாள் எதுவுமில்லை. சிறந்த மீம்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்படும்.
- வெற்றியாளர்கள் எத்தனை நபராகவும் இருக்கலாம். சிறந்த மீம்களை உருவாக்கும் அனைவருக்கும் பரிசும், பாராட்டும் உண்டு.
- போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசு அவர்களை மீண்டும் திரைப்படங்கள் மீதான ஆர்வத்தையும், அன்பையும் அதிகரிக்கும் வகையில் இருக்கும்.
இனியும் காத்திருக்க வேண்டாம். சிறந்த மீம்களை உருவாக்குங்கள்.....
**************
(Release ID: 1877779)
Sri/GS/RS/KRS
(Release ID: 1877993)
Visitor Counter : 171