தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நான் கதைகள் எழுதுவதில்லை, கதைகளைத் திருடுகிறேன்: இந்தியாவின் 53வது சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் வகுப்பில் வி விஜயேந்திர பிரசாத்

Posted On: 21 NOV 2022 7:13PM by PIB Chennai

நான் கதைகள் எழுதுவதில்லை, கதைகளைத் திருடுகிறேன். உங்களைச் சுற்றி கதைகள் உள்ளன. மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் அல்லது நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் என எல்லா இடங்களிலும் கதைகள் உள்ளன. உங்கள் தனித்துவமான பாணியில் அதை நீங்கள் எழுத வேண்டும் என்று பாகுபலி, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மகதீரா போன்ற வெற்றிப் படங்களின் புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத் கூறினார்.

உங்கள் கதைக்காக பார்வையாளர்களிடையே பசியை உண்டாக்க வேண்டும் என்ற நாட்டம் உங்களுக்குள் படைப்பாற்றலைத் தூண்டுகிறது. நான் எப்போதும் என் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து பார்வையாளர்களுக்குள் பசியை உருவாக்க முயற்சிக்கிறேன், அது தனித்துவமான மற்றும் ஈர்க்கக்கூடிய ஒன்றை உருவாக்க என்னைத் தூண்டுகிறது.”, என்று கூறினார்.

கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, ‘வெற்றியாளரின் எழுது முறைஎன்ற தலைப்பில் இன்று நடைபெற்ற மாஸ்டர் வகுப்பில் அவர் திரைப்பட ஆர்வலர்களுடன் உரையாடினார்.

திரு. பிரசாத் தனது திரைக்கதை பாணியைப் பற்றி பேசுகையில், இடைவேளையில் ஒரு திருப்பத்தை நினைத்து, அதற்கேற்ப கதையை தான் வரிசைப் படுத்துவதாக கூறினார். "நீங்கள் ஒன்றுமில்லாதவற்றிலிருந்து ஒன்றை உருவாக்க வேண்டும். நீங்கள் ஒரு பொய்யை முன்வைக்க வேண்டும், அது உண்மை போல் தெரிய வேண்டும். ஒரு நல்ல பொய்யைச் சொல்லக்கூடிய ஒருவன்தான் உண்மையில் , நல்ல கதைசொல்லியாக இருக்க முடியும்என்று அவர் மேலும் கூறினார்.

வளர்ந்து வரும் கதை எழுத்தாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருவர் தனது மனதைத் திறந்து எல்லாவற்றையும் கவனித்து உள்வாங்க வேண்டும். "நீங்கள் உங்களுக்கே  கடுமையான விமர்சகர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் உங்களது சிறந்தவை வெளிவரும், உங்களால் உங்கள் வேலையை அளவிட முடியாத உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற வெற்றிப் படங்களுக்கு எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு. பிரசாத், “நான் எழுதுவதில்லை, கதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கிறேன். கதையின் ஓட்டம், பாத்திரங்கள், திருப்பங்கள் என எல்லாம் என் மனதில் இருக்கிறது’. ஒரு நல்ல எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர், முதன்மைக் கதாநாயகன் மற்றும் பார்வையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

இந்த அமர்வை திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான மயங்க் சேகர் ஒருங்கிணைத்தார்.

******

Kasi/KRS



(Release ID: 1877969) Visitor Counter : 123