தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 3

தெற்காசியாவின் மிகப்பெரிய சந்தை- திரைப்படங்களின் வணிக ரீதியிலான பரிமாற்றக் கூடத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கிவைத்தார்

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் தெற்காசியாவில்  மிகப் பெரிய திரைப்பட சந்தையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்  இன்று தொடங்கி வைத்தார். 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவிற்கு இடையே தெற்காசியா மற்றும் சர்வதேச திரைப்பட பிரிவினருக்கு இடையே, படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் நிதி சார்ந்த இணைப்பை ஏற்படுத்தவும் இந்த முன்னெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் திரு அபூர்வ சந்திரா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக பிரதிநிதிகள் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியல் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், உலகில் அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறினார். ஆசியாவின் மிகப் பெரிய திரைப்பட விழாவாக இந்திய சர்வதேச திரைப்பட விழா திகழ்கிறது என்று தெரிவித்தார்.

திரைப்படத்துறைக்கு மிகப் பெரிய சந்தையிடமாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார். திரைப்படத்  தயாரிப்பாளர்களை கண்டறியவும் இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்பையும் இந்திய சர்வதேச திரைப்படவிழா வழங்கும் என்று தெரிவித்தார். இவ்விழாவை மேலும் பெரியதாகவும், சிறந்ததாகவும் மாற்றுவதற்கான கருத்துக்களையும், சிந்தனைகளையும் அளிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள திரைப்பட வாங்குவோர் மற்றும் விற்பனை செய்வோரிடையே இணைப்பை ஏற்படுத்தும்.

                                       **************
(Release ID: 1877735)
SM/IR/KPG/KRS

iffi reel

(Release ID: 1877776) Visitor Counter : 197