தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல ஸ்பெயின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சவுரா, சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்
கோவாவில் இன்று (20.11.2022) தொடங்கிய 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபல ஸ்பெயின் திரைப்பட இயக்குநர் கார்லோஸ் சவுராவுக்கு, சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சர்வதேச திரைப்படத்துறையில் ஸ்பெயின் இயக்குநர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் அவருக்கு இவ்விருது அளிக்கப்பட்டது. அவரது சார்பாக அவருடைய மகள் அன்னா சவுரா இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.
இவ்விருது கிடைத்தது குறித்து காணொலி காட்சி வாயிலாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கார்லோஸ் சவுரா, மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பிலிருந்து குணமடைந்து வரும் நிலையில், தம்மால் நிகழ்ச்சியில், கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். தமக்கு இவ்விருதை அளித்த திரைப்படவிழா அமைப்பாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இவ்விருதைப் பெற்ற ஸ்பெயின் திரைப்பட இயக்குநருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், திரைப்படத் தயாரிப்பில் தமது வாழ்க்கையையே அவர் அர்ப்பணித்துள்ளதாக கூறினார். திரைப்படத் தயாரிப்பு மற்றும் ஒலிப்பதிவில் அவர் சிறந்து விளங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
-------
(Release ID: 1877557)
MSV/IR/KPG/KRS
(Release ID: 1877717)
Visitor Counter : 174