தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக தொடங்கியது
திரைப்பட படப்பிடிப்புகள், படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு இந்தியாவை நோக்கி ஈர்ப்பதே நமது தொலைநோக்கு : திரு அனுராக் தாக்கூர்
‘நாளைய படைப்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பு ’
‘ இந்தியாவுடனான உறுதியான உறவைக் கௌரவிக்கும் வகையில் பிரான்சுக்கு தனிக்கவன மரியாதை’
இந்த ஆண்டின் இந்தியத் திரைப்பட ஆளுமை விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது
கலை மற்றும் திரைப்பட உலகின் எல்லைகளை இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்துள்ளது : டாக்டர். எல். முருகன்
உலகின் தலைசிறந்த திரைப்படங்களையும், அதன் நட்சத்திர படைப்பாளிகளையும் மீண்டும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் , 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாபு இன்று கோவாவின் பனாஜியில் உள்ள டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான விழாவுடன் தொடங்கியது. தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், கோவா பொழுதுபோக்கு சபை ஆகியவை இணைந்து இந்த ஆண்டின் திரைப்பட விழாவை நடத்துகிறது. இத்திரைப்பட விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 படங்களின் தொகுப்பு காடிசிப்படுத்தப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கான குத்து விளக்கை ஏற்றி வைத்து, மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், நமது மக்களின் திறமை மற்றும் நமது திரைப்படத் தொழில்துறை தலைவர்களின் புதுமைகள் மூலம், திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் அதற்குப் பிந்தைய பணிகளுக்கு இந்தியாவை அதிகம் தேடும் இடமாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என்றார். “இந்த திரைப்பட விழாவுக்கான எனது பார்வை ஒரு நிகழ்வோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக, அமிர்தப் பெருவிழாவிலிருந்து அமிர்த காலத்துக்கு மாறும்போது, இந்தியா சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது, இத்திரைப்பட விழா எப்படி இருக்க வேண்டும் எனப்தை நோக்கமாகக் கொண்டதாகும். பிராந்திய படங்களுக்கான திரைப்பட விழாக்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை அனைவரையும் உள்ளடக்கிய படைப்பாற்றல் மையமாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் விளக்கினார்.
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, எண்ணற்ற துடிப்பான கலாச்சாரங்கள் செயல்திறன் மிக்க படங்களை காட்சிப்படுத்த தயாராக உள்ளது. நாட்டின் செழுமையான கலாச்சாரம், மரபுகள், பாரம்பரியம்,நம்பிக்கைகள், கனவுகள், அபிலாசைகள், லட்சியம், எல்லாவற்றுக்கும் மேலாக வரலாற்றில் எந்த நேரத்திலும் மக்களின் கூட்டு மனசாட்சியை திரைப்படங்கள் படம்பிடித்து காட்டுகின்றன’’ என்று அவர் கூறினார்.
ஆசியாவின் மிகப் பழமையான திரைப்பட விழா குறித்து நினைவு கூர்ந்த திரு அனுராக் தாக்கூர், 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய சர்வதேச திரைப்பட விழா, உலகமே ஒரே குடும்பம் என்னும் கருப்பொருளில் வேரூன்றி உள்ளது, இது அமைதியான கூட்டுறவின் சாரத்தை உள்ளடக்கியது என்றார். "இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய பங்கு, ஜி20 தலைமைப் பொறுப்பு ஆகியவை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற இந்த கருப்பொருளைச் சுற்றி வருகிறது." என்று அவர் தெரிவித்தார். இந்திய திரைப்படப் பிரிவு, உலக சினிமா, அஞ்சலி, திரும்பிப் பார்த்தல் போன்ற பாரம்பரியப் பிரிவுகளுடன் திரைப்பட விழா தொடர்ந்தாலும், இந்த ஆண்டின் 53வது பதிப்பு புதுமையான கூறுகளைச் சேர்த்துள்ளது. குறிப்பாக தங்கள் படங்களுக்கு ஆதரவான நட்சத்திரங்களின் வருகை. அந்த வகையில், இஸ்ரேலின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் இந்த முறை வருகிறார். தேசிய திரைப்படப் பிரிவின் ஃபிலிம் பஜாரில் உள்ள அரங்குகள், மத்திய மக்கள் தொடர்பகத்தின் மல்டிமீடியா கண்காட்சி, ‘நாளைய 75 படைப்பாளர்களுக்கான 53-மணிநேர சவால் ஆகியவை பல முயற்சிகளில் முக்கியமானவையாகும்.
இந்தியாவுடனான உறுதியான உறவைக் கௌரவிக்கும் வகையில் பிரான்சுக்கு தனிக்கவனம்
இந்தியாவுடன் உறுதியான நல்லுறவைப் பேணி வரும் பிரான்ஸ் நாட்டுக்கு மதிப்பளித்து, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தனிக்கவனம் செலுத்தப்படும் அமர்வு குறித்து விளக்கிய அமைச்சர், பிரான்ஸ் தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஃபிரான்காய்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சமகாலத் திரைப்படங்களின் தொகுப்பு காண்பிக்கப்படவுள்ளதாக கூறினார். "பிரெஞ்சு சினிமாவின் ஆழமான கதைகள் திரைப்படத்துக்கு இலக்கணம் வகுத்து, நீண்ட காலமாக உலக அளவில் புகழ்பெற்றவையாகும். இரு நாடுகளின் நீண்டகால நட்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அணுசக்தி, விண்வெளி மற்றும் சினிமா போன்றவற்றில் பரிமாற்றங்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மார்ச்சே டி பிலிம்ஸில் இந்தியாவின் 'கௌரவ நாடு' என்ற உணர்வைத் தொடர்ந்து, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தனிக்கவனத்துக்குரிய நாடு என்ற பெருமையுடன் பிரான்சை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திரு தாக்கூர் கூறினார்.
'நாளைய படைப்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்’
’75 'நாளைய படைப்பாளர்கள் முன்முயற்சி’ குறித்து குறிப்பிட்ட அமைச்சர், இந்தியா சுதந்திரம் அடைந்து, கடந்து வந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்படும் படைப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இயக்கம், படத்தொகுப்பு, பின்னணிப் பாடல், திரைக்கதை எழுதுதல், அனிமேஷன் மற்றும் நடிப்பு போன்ற 10 வகைகளில் கிட்டத்தட்ட 1,000 அனுமதி பதிவுகளில், 75 'நாளைய படைப்பாளர்களின்' ஒரு சிறந்த நடுவர் குழுவினரால் கடுமையான செயல்முறைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நடுவர் குழுவில், வாழ்நாள் சாதனையாளர்கள் விருது பெற்றவர்கள், தேசிய விருது பெற்றவர்கள், கிராமி மற்றும் ஆஸ்கார் விருது பெற்றவர்கள் அடங்குவர்.
பிரசூன் ஜோஷி, ரசூல் பூக்குட்டி, ஆர் பால்கி, ரிக்கி கேஜ், மாலா டே பந்தியா, கௌதமி தடிமல்லா, பல்லு சலுஜா, முஞ்சல் ஷ்ராஃப், நரேந்திர ராகுரிகர், ரவி கே சந்திரன், நிகில் மகாஜன், உஜ்வல் ஆனந்த், பிஷாக் ஜோதி, ப்ரணிதா சுபாஷ், மாளவிகா, தேசாய், தீபக் சிங், கார்த்திக் பழனி, சுஜீத் சாவந்த் போன்ற இந்திய திரைப்படத் துறையில் மிகவும் புகழ்பெற்ற, திறமையான ஜாம்பவான்கள் 20 பேரை கொண்ட ஒரு பிரம்மாண்டமான தேர்வுக்குழுவால் ஆராயப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ), தொடக்க நிகழ்வாக ஆஸ்திரியாவின் தனித்துவமிக்க, பிரபல இயக்குனர் டைட்டர் பெர்னரின் தலைசிறந்த படைப்பான ‘அல்மா மற்றும் ஆஸ்கர்’ திரையிடப்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
இந்த ஆண்டு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றதற்காக பிரபல ஸ்பானிஷ் திரைப்பட கலைஞர் கார்லோஸ் சௌராவை அமைச்சர் பாராட்டினார். திரு. சௌரா 6 தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். அவர் தனது வாழ்நாளில் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சார்பாக அவரது மகள் அன்னா சௌரா விருதை பெற்றுக்கொள்வார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.
இந்தத் திருவிழாவை முழுமையானதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்காக, திவ்யங்ஜன் திரையிடல்களுக்கு (மாற்றுத் திறனாளிகள்) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று திரு தாக்கூர் கூறினார்.
எல்லைகளைக் கடந்த சர்வதேச திரைப்பட விழா
இந்திய சர்வதேச திரைப்பட விழா கலை மற்றும் திரைப்பட உலகின் எல்லைகளை கடந்து இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார். கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் 53-வது திரைப்பட விழா எழுச்சிமிக்க வகையில் கொண்டாடப்படுகிறது. இந்திய சர்வதேச திரைப்பட விழா பல்வேறு நாடுகளிலில் இருந்து வந்திருக்கும் பிரதிநிதிகள் இடையே கூட்டு முயற்சியை மேம்படுத்தி திரைப்பட உலகை ஒன்றுபடுத்துவதாக நமது பிரதமர் கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த திரைப்பட விழாவில் சினிமா ஆர்வலர்கள் விரும்பும் அத்தனை அம்சங்களும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவை திரைப்பட பணிகளின் மையமாக உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தவகையில் மேற்கொள்ளப்படும் முன் முயற்சிகளை அவர் பட்டியலிட்டார். சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்பானீஷ் இயக்குனர் கார்லஸ் சவ்ராவை அவர் பாராட்டினார். திரைப்பட விழாவின் வெற்றிக்கு மறைந்த மனோகர் பாரிக்கரின் தலைமையின் கீழும், தற்போதைய முதலமைச்சர் பிரமோத் சாவந்தின் தலைமைப் பொறுப்பிலும் கோவா மாநில அரசு பெரும் பங்களித்திருப்பதாக டாக்டர் எல் முருகன் கூறினார்.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், உலகத்தரம் வாய்ந்த மல்டிபிளக்ஸ் மற்றும் மாநாட்டு மையம் கோவாவில் விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார். 2025-ம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா புதிய அரங்கில் நடைபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடக்க விழாவில் கோவா அரசின் தலைமைச் செயலாளர் திரு புனித் குமார் கோயல், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவீந்தர் பாகர் மற்றும் பிற முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். மிருணால் தாகுர், வருண் தவான், கேத்தரின் தெரசா, சாரா அலி கான், கார்த்திக் ஆர்யன் மற்றும் அம்ரிதா கான்வில்கர் போன்ற திரையுலக பிரபலங்களும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
**************
(Release ID: 1877566)
MSV/PKV/GS/RR
(Release ID: 1877713)
Visitor Counter : 214