தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
குழந்தை பருவத்தின் கனவுகளையும், ஆற்றல்களையும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா காட்சிப்படுத்துகிறது
குழந்தை பருவத்தின் கனவுகளையும், ஆற்றல்களையும், நுட்பமான அறிவையும் காட்சிப்படுத்துவதற்கு, 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா உறுதி பூண்டுள்ளது. குழந்தைகள் வடிவமைக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மக்களின் எண்ணங்களைத்தான் வடிவமைக்க வேண்டும் என்று பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜெஸ் லயர் தெரிவித்துள்ளார்.
'கேபெர்னம்' திரைப்படத்தில் குழந்தைப் பருவத்தை முற்றிலும் தொலைத்த ஒரு சிறுவனின் கதைக்களத்தில் இருந்து 'நானி தெரி மோர்னி' திரைப்படத்தில் மோன்பெனி எசங்-ன் கதாபாத்திரம் வரையில் குழந்தைகளின் சிறப்புமிக்க ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளின் வீர, தீர செயல்களுக்கான தேசிய விருது பெற்றவர் மோன்பெனி எசங் ஆவர். அவர் தண்ணீரில் மூழ்கிய அவரது பாட்டியை பயமின்றி உயிரோடு காப்பாற்றினார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஐக்கிய நாடுகள் சர்வதேச நிதியத்துடன் இணைந்து சிறார் பிரிவில் 6 திரைப்படங்களை திரையிடுகிறது.
'சுமி' என்ற திரைப்படத்தில், இந்தியாவின் கிராமப்புறப் பகுதியில் வாழ்ந்து வரும் அடிப்படை வசதிகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட 12 வயது சிறுமி சுமதியின் வாழ்க்கையை பற்றிய கதையாகும். அவரது வீட்டிலிருந்து பள்ளிக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்ததால், தனக்கு மிதிவண்டி வேண்டும் என்று கனவு காண்கிறார். அதற்காக அவரது போராட்டம், நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
வங்காள மொழி திரைப்படமான 'நானி தெரி மோர்னி'யில் இரண்டு 8 வயது சிறுவர்களின் வாழ்வில், பாபர் மசூதி விவகாரத்திற்கு பிறகு மத உணர்வு எவ்வித பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 'உத் ஜா நானே தில்' மற்றும் 'தனக்' போன்ற திரைப்படங்களும் இந்த பிரிவில் திரையிடப்படுகின்றன.
**************
(Release ID: 1877597)
MSV/GS/KG/RR
(रिलीज़ आईडी: 1877676)
आगंतुक पटल : 201