தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘இந்திய விடுதலை இயக்கமும் சினிமாவும் ’ எனும் பல்லூடக கண்காட்சியை 53-வது இந்திய திரைப்பட விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைக்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய மக்கள் தொடர்பகம் கண்காட்சிக்கு ஏற்பாடு
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நாளை கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நினைவாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மக்கள் தொடர்பகம் அமைக்கிறது. கோவாவின் பன்ஜிமில் நாளை முதல் 28ந் தேதி வரை இந்தக்கண்காட்சி நடைபெறும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அரிய காட்சிகளைக் கொண்ட கண்காட்சி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை மக்களிடம் கொண்டு செல்வதையும், இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தின் காலவரிசைப் பயணத்தை புரட்டும் வகையில், சுதந்திர இயக்கத்தின் பல்வேறு நாயகர்கள் பற்றிய விவரங்கள் படங்களின் மூலம் சித்தரிக்க்கபடும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் எழுச்சியூட்டும் உரைகளின் ஆடியோக்கள், இயக்கத்தின் குரலாக மாறிய முக்கிய பாடல்கள், மறக்கமுடியாத உரையாடல்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருக்கும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போர் குறித்த முழுமையான அனுபவத்தைப் பெறக்கூடிய ஒரு திரையரங்கு அறை கட்டப்பட்டுள்ளது.
இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்கள் குறித்து எடுக்கப்பட்ட படமும் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட இந்திய சினிமா வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் உள்பட பல காட்சிகள் உள்ளன. சுதந்திர இயக்கம் பற்றிய தங்கள் அறிவை வளப்படுத்தும் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஜர்னி ஆஃப் இந்தியாவில் டிஸ்கவரி சேனல் தயாரித்த திரைப்படங்கள், நெட்ஃபிளிக்ஸின் அனிமேஷன் தொடர்கள், சமீபத்தில் தயாரிக்கப்பட்ட தூர்தர்ஷனின் ஸ்வராஜ் தொடர் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
*********
MSV/PKV/DL
(Release ID: 1877546)
Visitor Counter : 273