தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 3

கோவாவில் நடைபெறவுள்ள 53வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு த் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்து கொள்ளவிருக்கிறார்

மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் 2022 நவம்பர் 20 முதல் நவம்பர் 21 வரை இரண்டு நாட்களுக்கு கோவாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா மற்றும் இவ்விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்புமிக்கத் தொடக்கமாக நவம்பர் 20 அன்று ஆஸ்திரிய இயக்குனர் டீட்டர் பெர்னரின் அல்மா மற்றும் ஆஸ்கர் திரையிடலில் அமைச்சர் தாக்கூர் கலந்து கொள்வார். பின்னர் அன்று மாலை தொடக்க விழாவில் பங்கேற்க டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கிற்கு அவர் செல்வார். இந்தத் தொடக்க விழாவில் 2022 ஆம் ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருதினை அறிவிக்கும் அமைச்சர், ஸ்பெயின் திரைப்பட இயக்குனர் கார்லோஸ்  சௌராவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குவார்.

தனது பயணத்தின் இரண்டாவது நாளில் (நவம்பர் 21, 2022), நாளைய படைப்பாக்க மனங்கள் 75-ன் 2வது பதிப்பு  தொடக்க விழாவில் அமைச்சர் பங்கேற்பார், அங்கு அவர் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள  நம்பிக்கைக்குரிய 75 இளம் சினிமா திறமையாளர்களுடன் உரையாடுவார். பின்னர் திரு  தாக்கூர்,  திரைப்பட சந்தை அரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார். இதைத் தொடர்ந்து, திரைப்பட விழாவின் இந்திய பனோரமா பிரிவு மற்றும் கவனம் குவிக்கும் நாடு (பிரான்ஸ்) பிரிவின் தொடக்க விழா ஆகியவற்றில் அவர் கலந்து கொள்வார்.

பன்ஜிம் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் திரைப்படத் தொழில்நுட்பக் கண்காட்சியைத்   தொடங்கிவைத்தபின் தனது இரண்டு நாள் கோவா பயணத்தை அமைச்சர் அனுராக் சிங்  நிறைவுசெய்வார். இந்தக் கண்காட்சியில்  தொழில்நுட்பம் மற்றும் திரைப்படக் கலை/சினிமா மற்றும் அழகியல் தொடர்பான பல்வேறு அம்சங்கள்  காட்சிப்படுத்தப்படும்.

*********

MSV/SMB/DL

iffi reel

(Release ID: 1877495) Visitor Counter : 173