தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஒரு அனிமேஷன் படம் உள்பட 3 ஜப்பானிய படங்கள் திரையிடப்படுகின்றன

Posted On: 19 NOV 2022 8:16PM by PIB Chennai

ஜப்பானிய திரையுலகம் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகச்சிறந்த திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளது. ஒசு, மிசோகுச்சி, குரோசவா போன்ற உலகத்தரம் வாய்ந்த இயக்குநர்கள் கோலோச்சிய பூமி ஜப்பான். அந்நாட்டிலிருந்து இம்முறை ஒரு அனிமேஷன் படம் உள்பட 3 திரைப்படங்கள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன.

மசாக்கி குடோ இயக்கிய ஏ பார்  ஷோர் (டூய் டொக்கோரா), யமாசாக்கி ஜூய்சிரோ இயக்கிய யமாபுக்கி, கோஜி யமாமுரா இயக்கிய டஜன்ஸ் ஆப் நார்த் (இகுட்டா நோ கிட்டா)  ஆகியவை அப்படங்கள். இதில் டஜன்ஸ் ஆப் நார்த் அனிமேஷன் படமாகும். மூன்று இயக்குநர்களும் உலகப்புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ பார்  ஷோர் (டூய் டொக்கோரா) படம், பள்ளி செல்லும் மாணவியின் படிப்பு தடைபட்டு, இளைஞன் ஒருவனுடன் ஏற்பட்ட நேசத்தால், ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறாள். கணவனுக்கு வேலை போய்விட, அந்தப்பெண் நைட்கிளப்பில் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முதிர்ச்சியற்ற அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் சச்சரவுகளை விளக்குகிறது இப்படம்.

யமாபுக்கி திரைப்படமும் ஒரு இளம்பெண்ணின் வாழ்வில் நிகழும் அன்றாட போராட்டங்களை விவரிக்கும் படமாகும். அனிமேஷன் படம், 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பிந்தைய பாதிப்புகளை விளக்குகிறது.

*********

MSV/PKV/DL



(Release ID: 1877494) Visitor Counter : 145