தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற நிகழ்ச்சியாக மாறுகிறது
கோவாவில் நாளை முதல் வரும் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ள 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை அனைவரும் தடையின்றி அணுக வகை செய்திருப்பது, அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். விழா நடைபெறும் இடத்தை தடையற்றதாக மாற்றுவதற்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளும் எளிதில் அணுகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு, சினிமாவை அனைவரும் அணுகக்கூடிய பாதையாக மாற்றுவதற்கான ஒரு படியாகும். இந்தப் பிரிவில், மாற்றுத்திறனாளி பார்வையாளர்களுக்கான பிரத்யேக காட்சிகளுக்கு, அவர்களின் அணுகல் தேவைகளை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் ஆடியோ விளக்கங்கள் இருக்கும். ஆடியோ விளக்கங்கள் என்பது ஒரு படத்தில் உள்ள காட்சித் தகவலை விவரிக்கும்..
ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் போன்ற படங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் திரையிடப்படும், அவை ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
கலையை உருவாக்கும் செயல்முறை அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இலவச படிப்புகளை நடத்துகிறது - இது ஆட்டிசம் உள்ளவர்களுக்கான ஸ்மார்ட்ஃபோன் திரைப்படம் தயாரிப்பதற்கான அடிப்படைப் பாடமாகும்.
திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தொட்டுணரக்கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லியில் வழிகாட்டு பலகைகள் போன்ற வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
*********
MSV/PKV/DL
(Release ID: 1877343)
Visitor Counter : 191