நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது

Posted On: 19 NOV 2022 12:54PM by PIB Chennai

2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு  உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

 

•    58 சதவீதத்திற்கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள்  ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.

• 58 சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

• இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.

• எச் எஸ்  7201, 7208, 7209,7210,7213, 7214, 7219, 7222 & 7227 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பன்றி இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வரி இல்லை.

• ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி,  ஃபெரோனிக்கல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும்  .

•    கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும் .

இது  2022,  நவம்பர் 19  முதல் நடைமுறைக்கு வரும்.

தற்போதைய நடவடிக்கைகள் உள்நாட்டு எஃகுத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும்; ஏற்றுமதியை அதிகரிக்கும்.

*********

MSV/SMB/DL


(Release ID: 1877310) Visitor Counter : 244