தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு (ஐஎப்எப்ஐ) பிரதமர் வாழ்த்து


"கோவாவில் ஒன்றுகூடும் இந்த சிறிய சித்திர உலகில் நடைபெறும் நிகழ்வுகள் கலை உலகின் மீது ஆழமான புரிதலை எளிதாக்கி, புதியவற்றை கற்க வழிவகுக்கும் "

இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கலைத்துறையால்  ஒன்றுபட்ட பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே, ஒரு ஊக்கமளிக்கும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது, என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.  ஐஎப்எப்ஐ  இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட விழா என்று விவரித்த பிரதமர், " கோவாவில் ஒன்றுகூடும் இந்த சிறிய சித்திர உலகில் நடைபெறும் நிகழ்வுகள் கலை உலகின்  மீது ஆழமான புரிதலை எளிதாக்கி, புதியவற்றை கற்க வழிவகுக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐஎப்எப்ஐ மற்றும் இந்திய சினிமா ஆகியவை உலக அரங்கில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன, என்றார். "வெவ்வேறு இந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்கள் பெரிய அளவிலான சர்வதேச பார்வையாளர்களை சென்றடைகின்றன மற்றும் உலகம் முழுவதும் பெருமளவில் பாராட்டப்படுகின்றன.", என்று கூறினார்.

 

சமூக இயக்கவியலை பிரதிபலிப்பது மற்றும் அதனை வடிவமைப்பதில் சினிமாவின் பங்கு பற்றிய தனது எண்ணங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். “ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் கற்பனையை சினிமா ஆட்கொண்டு வருகிறது. சினிமா நம் காலத்தின் சமூக இயக்கவியலைப் பிரதிபலிக்கிறது மற்றும் அதை வடிவமைக்கிறது”, என்றார்.

 

சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் திரைப்படங்களின் பங்கு, நம் நாட்டின் பாரம்பரிய  வரலாறு மற்றும் கதை சொல்லும் கலை பற்றி பிரதமர் குறிப்பிட்டார். “திரைப்படங்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி, பார்வையாளர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான தனித்துவமான திறன் கொண்டது. திரைப்படங்கள் தனது கதைசொல்லல் புலமை மூலம் மக்களை மகிழ்வித்து, கல்வி கற்பித்து, ஊக்குவிக்கின்றன. சமூக மாற்றத்தின் வழித்தடமாக மாறுவதில் திரைப்படங்களின் செயல்திறன் மிக்க தாக்கங்கள் உண்மையில் ஈடு இணையற்றது. இந்தியா ஒரு முழுமையான,  மாறுபட்ட கலாச்சாரப் பண்புகளால்  ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதாவது அது நவீன அமைப்புடன் கூடிய பாரம்பரியத்தின் சிறந்த கலவையாகும். உரைநடை, கவிதை, இசை, நடனம், மேடை கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் முதல் சினிமா வரை பல்வேறு இந்திய மொழிகளில் கதை சொல்லும் வரலாறும், அதன் கலைத்திறனும், நமது சிறந்த சமூக-கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாட உதவுகிறது.

 

இந்தத் திருவிழாவிற்கு கோவா தான் சரியான இடம் என்றும், விழாப் பிரதிநிதிகள் தங்களது புத்தம், புதிய சிந்தனைகள் மூலம் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில்  பார்வையாளர்களை சென்றடையும். "அதன் அழகிய, இயற்கையான சூழல் மற்றும் சிறந்த கலாச்சாரம், கோவாவில் ஐஎப்எப்ஐ விழாவை நடத்துவதற்கான சரியான பின்னணியை வழங்குகிறது. கோவா, பங்கேற்பாளர்களின் ஆக்கப்பூர்வமான கற்பனையைத் தூண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  மேலும் வளர்ந்து வரும் புத்தம் புதிய பார்வையாளர்களுக்கு சினிமா அதன் எல்லையை விரிவுபடுத்த உதவும் புதிய யோசனைகளைக் கொண்டு வர அவர்களை ஊக்குவிக்கும்" என்று கூறினார்.

 

53வது ஐஎப்எப்ஐ மாபெரும் வெற்றியடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

********

MSV/DL

iffi reel

(Release ID: 1877227) Visitor Counter : 191