மத்திய பணியாளர் தேர்வாணையம்
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி 2022எழுத்துத் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
17 NOV 2022 7:10PM by PIB Chennai
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஏப்ரல் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் கடற்படை தேர்வு அமைப்புகளால் நடத்தப்பட்ட நேர்முக தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ராணுவ அகாடமியின் 149 ஆவது படிப்புக்காகவும், கடற்படை அகாடமியின் 111 ஆவது படிப்புக்காகவும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 519 பேர் தேர்வு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in, www.careerindianairforce.cdac.in. என்ற இந்த இணையதளங்களில் காணலாம்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் https://www.upsc.gov.in என்ற இணைய தளத்திலும் முடிவுகளை காணலாம். எனினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் இறுதி முடிவு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்கு மட்டுமே இந்த இணைய தளத்தில் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 011-23385271/011-23381125/011-23098543 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
**************
SMB/PLM/PK/KRS
(रिलीज़ आईडी: 1876877)
आगंतुक पटल : 257