அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின்கீழ் புதுமையான தொழில்நுட்ப உபகரணங்களுடன் உலகின் மிகக்குறைந்த மருத்துவ செலவுடைய நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
17 NOV 2022 1:02PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையின்கீழ் புதுமையான தொழில்நுட்ப உபகரணங்களுடன் உலகின் மிகக்குறைந்த மருத்துவ செலவுடைய நாடாக இந்தியா திகழ்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர்(தனிப்பொறுப்பு) புவிஅறிவியல்துறை, பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
எகனாமிக் டைம்சின் சுகாதாரத்துறை தலைவர்கள் மாநாடு 2022-ல் உரையாற்றிய டாக்டர்.ஜிதேந்திர சிங், 2019-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுவரை வெளிநாட்டினருக்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். பெருந்தொற்று காலத்தில் சர்வதேச பயணத்திற்கு பெரும்பாலும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது ஒரு பெரும் எண்ணிக்கையிலான அளவு என்று தெரிவித்தார். உலகின் மருத்துவ சுற்றுலா கேந்திரமாக நாடு வேகமாக முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச மற்றும் தேசிய அங்கீகாரம் பெற்ற சுமார் 600 மருத்துவமனைகள் இந்தியாவில் இருப்பதாகவும், இது குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டுக்குள் இந்திய சுகாதாரத்துறையின் வளர்ச்சி 50 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதேகால கட்டத்தில், சர்வதேச மருத்துவ சுற்றுலா சந்தை மதிப்பு சுமார் 72 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார். 2023-ஆம் ஆண்டுக்குள் மருத்துவ சுற்றுலாவில் இந்தியாவின் பங்கு 10 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். உலகிலேயே ஜென்ரிக் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார்.
**************
(Release ID: 1876709)
SMB/IR/AG/KRS
(Release ID: 1876851)
Visitor Counter : 171