ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தொகுப்பான 216 பிரதிநிதிகளுடன் ரயில்பயணம் இன்று தொடங்குகிறது

• ஒருமாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு 13 ரயில்கள் இயக்கப்படும்
• இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்
• இந்தப் பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள்
• இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும்

Posted On: 16 NOV 2022 4:49PM by PIB Chennai

ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளன. முதலாவது ரயில் 216 பிரதிநிதிகளுடன் இன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயிலில் 35 பிரதிநிதிகள் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சிராப்பள்ளியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும்  செல்வார்கள். தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, இந்த பிரதிநிதிகளுடன் சென்னை எழும்பூரில் நாளை (17.11.2022) கலந்துரையாடிய பின், கொடியசைத்து அனுப்பி வைப்பார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பார்.

இந்த ரயில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2592 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள். இந்த பிரதிநிதிகள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய இடங்களிலிருந்து தங்களின் பயணத்தை தொடங்குவார்கள். இந்த ரயில்கள் செல்லும் வழியில் 21 ரயில்நிலையங்களில் நிற்கும். ஒவ்வொரு ரயிலிலும் 216 பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள்.

“சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா”வின் ஒரு பகுதியாக மத்திய அரசின் முன்முயற்சியாக காசி தமிழ் சங்கமம் - 2022 அமைந்துள்ளது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை கொண்டாடுவதாக இது இருக்கும். மேலும் அழகிய தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இது கொண்டாடும்.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு இரண்டு தொன்மையான இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மையுடன், நிபுணர்கள்/ அறிஞர்களிடையே  கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெறும். இரண்டு ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வருவது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் புரிதலை உருவாக்குவது  இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை காணவும்: https://kashitamil.iitm.ac.in/

------------------

(Release ID: 1876493)

SMB/RS/KRS


(Release ID: 1876540) Visitor Counter : 229


Read this release in: Hindi , English , Urdu , Odia