ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான தூரக்கட்டுப்பாட்டை ரயில்வே அமைச்சகம் அதிகரித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2022 4:07PM by PIB Chennai

புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள்  வாங்குவதற்கான தூரத்தை ரயில்வே அமைச்சகம் 20 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புறநகர் பகுதிகளில் இந்த தூரம் 5 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பயணிகள் 5 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். புறநகர் பிரிவுக்கு யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெறுவதற்கான தூரம் 2 கிலோ மீட்டராக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை காணவும்: https://www.utsonmobile.indianrail.gov.in

**************

MSV/SMB/RS/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1875829) வருகையாளர் எண்ணிக்கை : 206
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu