சுற்றுலா அமைச்சகம்

பசிபிக் ஆசியா போக்குவரத்து அமைப்பு (பிஏடிஏ)– இந்தியா இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து லண்டன், உலக போக்குவரத்து சந்தையில் பிஏடிஏ தலைமை செயல் அதிகாரியை சுற்றுலாத்துறை செயலாளர் சந்தித்தார்

Posted On: 10 NOV 2022 1:39PM by PIB Chennai

பசிபிக் ஆசியா போக்குவரத்து அமைப்பு (பிஏடிஏ) இந்தியா இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து லண்டனில் நடைபெற்ற, உலகப் போக்குவரத்து சந்தை கூட்டத்தில் பசிபிக் ஆசியா போக்குவரத்து அமைப்பு தலைமை செயல் அதிகாரி திருமதி லிஸ் ஆர்டிகுவேராவை, மத்திய  சுற்றுலாத்துறை செயலாளர்  திரு அரவிந்த் சிங், கூடுதல் செயலாளர் திரு ராகேஷ் குமார் வர்மா ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு கூட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள், பிஏடிஏ போக்குவரத்து சந்தை மற்றும் இதர ஜி20 நாடுகளின் சார்பிலான நிகழ்வுகளில் பங்கேற்றல் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்தனர். லண்டனில் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்ற உலகப் போக்குவரத்து சந்தைக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.

பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள், சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், இந்திய போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவர்கள் வர்த்தகத் தொழில்துறை அமைப்பின் சர்வதேச இயக்குநர் திரு ஆண்டி பர்வலை சந்தித்துப் பேசினர். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இந்தியா எவ்வாறு முதலீட்டுக்கு உகந்த இடமாகத் திகழ்கிறது என்பது குறித்தும் அப்போது அவர்கள் விவாதித்தனர்.

----------------

AP/IR/RS/IDS



(Release ID: 1874973) Visitor Counter : 129