பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி ஊழல் இல்லாத இந்தியாவை கட்டமைக்க முடியும் என்கிறார் மக்களைத் தலைவர் திரு ஓம் பிர்லா

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2022 12:36PM by PIB Chennai

குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருதல், ஊழலைத் தவிர்த்தல், ஜனநாயகத்தை மக்களிடையே உண்மையாக கொண்டு செல்லுதல் ஆகியவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.

புதுதில்லி விக்கியான் பவனில், மத்திய தகவல் ஆணையத்தின் 15-வது ஆண்டுக் கூட்டத்தில், குடிமக்கள் - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாகக் கொண்ட நிர்வாகம் என்ற தலைப்பில்   உரையாற்றிய திரு ஓம் பிர்லா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் குறிக்கோளின்படி ஊழல் இல்லா இந்தியாவை கட்டமைக்க முடியும் என்று கூறினார்.

மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பேசிய போது, வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்களை மையமாக கொள்ளுதல், மோடி நிர்வாக மாதிரியின் முத்திரை என்று  தெரிவித்தார்.

அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள குடிமக்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண் என்றும், மத்திய தகவல் ஆணையம் தகவல் மூலம், மக்களுக்கு அதிகாரம் அளிக்க தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டார்.

கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 38,116 என்ற எண்ணிக்கையில் நிலுவையில் இருந்து வழக்குகளை 2021-22-ஆம் ஆண்டு 23,405 என்ற அளவிற்கு மத்திய தகவல் ஆணையம் வெற்றிகரமாக குறைத்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை தகவல் ஆணையர் திரு ஒய் கே சின்ஹா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமை அதிகரித்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

----

SM/IR/KPG/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1874723) வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu