புவி அறிவியல் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் புவி அறிவியல் அமைச்சகத்தின் (எம்ஓஇ எஸ்) தன்னாட்சி நிறுவனங்களின் (ஐஐடிஎம், ஐஎன்சிஓஐஎஸ், என்சிஇஎஸ்எஸ், என்சிபிஓஆர் மற்றும் என்ஐஓடி) முதல் ஒருங்கிணைந்த அமைப்பு கூட்டத்திற்குத் தலைமை ஏற்பு
Posted On:
08 NOV 2022 4:44PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை (தனி பொறுப்பு) இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் இன்று புவி அறிவியல் அமைச்சகத்தின் (எம்ஓஇ எஸ்) தன்னாட்சி நிறுவனங்களின் (ஐஐடிஎம், ஐஎன்சிஓஐஎஸ், என்சிஇஎஸ்எஸ், என்சிபிஓஆர் மற்றும் என்ஐஓடி) முதல் ஒருங்கிணைந்த அமைப்பு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதுவரையில் தனித்தனியாக செயல்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து, முழுமையாக அரசு அணுகுமுறையுடன் பணிபுரிய வேண்டும் என்றார்.
ஐந்து தன்னாட்சி அமைப்புகளான இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐடிஎம்), பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (ஐஎன்சிஓஐஎஸ்), புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் (என்சிஇஎஸ்எஸ்), துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (என்சிபிஓஆர்) மற்றும் தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (என்ஐஓடி) ஆகியவை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் ஒரே அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவுக்கு இணங்க இதுவரையில் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு அதிகபட்சமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பிரதமர் திரு மோடிக்கு இயற்கையாகவே அறிவியலின் மீது ஆர்வம் இருப்பது மட்டுமல்லாமல், கடந்த 7-8 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன் முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆதரித்து, ஊக்குவிப்பதிலும் சிறந்து விளங்குகிறார் என்றார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், புவி அறிவியல் அமைச்சகம் "கடல் கண்காணிப்பு" என்ற கருத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் பயனுள்ள முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்ள விண்வெளி பயன்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
ஓசன்சாட் 2022 நவம்பர் 26 ஆம் தேதி ஏவப்படும் என்றும் நாசா-இஸ்ரோ ரேடார் அமைப்பை நிறுவும் பணிகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு – மத்சியா 6000-ஐ டாக்டர் ஜிதேந்திர சிங் மதிப்பாய்வு செய்தார்.
**********
MSV/GS/IDS
(Release ID: 1874534)
Visitor Counter : 207