குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தேசிய எஸ்சி - எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்பு குழுவின் (HPMC) 5வது கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தலைமை வகித்தார்
Posted On:
04 NOV 2022 12:30PM by PIB Chennai
தேசிய எஸ்சி-எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழுவின்ன் (எச்பிஎம்சி) 5வது கூட்டம் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே தலைமையில் நடைபெற்றது. இணை அமைச்சர் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை இணை திரு பானு பிரதாப் சிங் வர்மா இணைந்து பங்கேற்ற இந்தக் கூட்டம் 3 நவம்பர் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய திரு நாராயண் ரானே, தேசிய எஸ்சி- எஸ்டி மைத்தின் முக்கிய நோக்கம், எஸ்சி-எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதுதான் என்று கூறினார். அவர்களிடமிருந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை 4 சதவீத அளவுக்கு கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற இலக்கை எட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசு ஏற்படுத்திய பொதுத்துறை கொள்முதல் திட்டம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், எஸ்சி-எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோரிடமிருந்து மேற்கொள்ளப்படும் கொள்முதல் பெருமளவு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தின் உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பேசிய இணையமைச்சர், தேசிய எஸ்சி-எஸ்டி மையத்தின் (NSSH) செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தமது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள், எஸ்சி-எஸ்டி பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், நித்தி ஆயோக் உறுப்பினர்கள், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சக அதிகாரிகள் ,பழங்குடியினர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
**************
SM/PLM/RS/IDS
(Release ID: 1873658)
Visitor Counter : 171