தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்தில் இரண்டாம் கட்ட தூய்மை இயக்க பணிகள் உள்ளிட்ட ஊடகப்பிரிவின் செயல்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
03 NOV 2022 3:45PM by PIB Chennai
ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் நிலையத்தில் பல்வேறு ஊடகப்பிரிவின் செயல்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆய்வு செய்தார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகிய ஊடக பிரிவிகளின் பணிகளை அவர் ஆய்வு செய்தார். தூர்தர்ஷன் துணை தலைமை இயக்குனர் திரு எஸ் சஞ்சீவ், அகில இந்திய வானொலி துணை தலைமை இயக்குனர் திரு அஜய் கே டோஹரே, பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம்/ மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் (மண்டலம்) திரு ராஜிந்தர் சௌத்ரி மற்றும் ஊடகப்பிரிவின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சாதனைகள் மற்றும் தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசுத் திட்டங்களை எடுத்துரைக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களை மேலும் விளம்பரப்படுத்துமாறும் இந்த வளர்ச்சி திட்ட பயனாளிகளின் கருத்துக்களை வெளியிடுமாறும் ஊடகப்பிரிவுகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
--------------------
SM/IR/RS/IDS
(रिलीज़ आईडी: 1873542)
आगंतुक पटल : 186