நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளராக திரு அம்ரித் லால் மீனா பொறுப்பேற்பு
Posted On:
01 NOV 2022 1:02PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளராக திரு அம்ரித் லால் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1989 ஆம் ஆண்டு பீகார் பிரிவைச் சேர்ந்த அவர், இப்பொறுப்பை ஏற்பதற்கு முன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் சிறப்பு செயலாளராக (லாஜிஸ்டிக்ஸ் - சரக்கு போக்குவரத்து பிரிவு) பொறுப்பு வகித்தார்.
நிலக்கரி அமைச்சக செயலாளராக ஏற்கெனவே பணியாற்றிய டாக்டர்.அனில் குமார் ஜெயின் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து திரு அம்ரித் லால் மீனா இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
**************
SM/PLM/RS/IDS
(Release ID: 1872682)