தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை மொத்தம் ரூ. 4,115 கோடி முதலீட்டுக்கு உறுதி அளித்துள்ள 42 பயனாளிகளுக்கு தொலை தகவல் தொடர்புத்துறை விரிவுபடுத்தியுள்ளது
Posted On:
31 OCT 2022 3:56PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு பேரூக்கம் அளிக்கும் வகையில் தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 28 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட 42 நிறுவனங்களுக்கு மானியம் வழங்க தகவல் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இவற்றில் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி வகைமையின் கீழ் கூடுதலாக 1% ஊக்கத்தொகை கோரி 17 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. மேற்குறிப்பிட்ட 42 நிறுவனங்கள் ரூ.4,115 கோடி முதலீட்டுக்கு உறுதி அளித்துள்ளன. இவற்றின் மூலம் ஊக்கத்தொகை திட்டக்காலத்தில் ரூ.2.45 லட்சம் கோடி கூடுதல் விற்பனை வாய்ப்பு ஏற்படும் என்றும் 44,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மதிப்புத் தொடரை வலுப்படுத்துவதற்காக தொலைத் தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 2022 -23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் வடிவமைப்பு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு தற்போதுள்ள ஊக்கத்தொகையைவிட 1% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தில் 2022 ஏப்ரல் 1 முதல், 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872271
**************
SM/SMB/KPG/KRS
(Release ID: 1872359)
Visitor Counter : 210