பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2022
Posted On:
31 OCT 2022 11:44AM by PIB Chennai
மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் திரு சுரேஷ் என். பட்டேல், ஊழல் தடுப்பு ஆணையர்கள் திரு பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா, திரு அரவிந்த் குமார் ஆகியோர் ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசிக்க, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதுதில்லியின் விக்யான் பவனில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தால் நடத்தப்பட உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872174
**************
SM/PK/RS/KRS
(Release ID: 1872258)
Visitor Counter : 1502