தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தன்பாதில் உள்ள நூற்றாண்டு பழமையான டிஜிஎம்எஸ் கட்டடத்திற்கு சிறப்புத் தூய்மை இயக்கம் 2.0 அழகு சேர்த்துள்ளது

Posted On: 30 OCT 2022 2:09PM by PIB Chennai

சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகக்  கட்டடம் சுமார் 114 ஆண்டுகள் பழமையானது மற்றும் தன்பாதில் உள்ள பழமையான பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றாகும். வழக்கமான உள் பராமரிப்பு மூலம் அதன் அசல் வடிவத்தில் இது காக்கப்படுகிறது. சிறப்புத் தூய்மை இயக்கத்தின் போது, டிஜிஎம்எஸ் தலைமையகத்தில் உள்ள, 1885 ஆம் ஆண்டு தொடங்கி  பழமையான கோப்புகளை பாதுகாப்பாகக் காவலில் வைத்திருந்த,100 ஆண்டுகளுக்கும் மேலான பதிவு அறைமீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

சிறப்புத் தூய்மை இயக்கம் 2.0ன் கீழ், டிஜிஎம்எஸ் தேர்வு பிரிவில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்ட முன்முயற்சியின் போது, 2014 ஆம் ஆண்டு வரையிலான பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் உள்ளன. இந்தப்  இயக்கத்தின் போது,டிஜிஎம்எஸ்-ன் பல்வேறு அலுவலகங்களில் வீணான பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம் ₹ 2,22,501.00 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது மற்றும் கோப்புகளை மறுசீரமைத்து அட்டவணைப்படுத்தியதன் மூலம் சுமார் 110 சதுர அடி வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

**************



(Release ID: 1872016) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi , Telugu