பாதுகாப்பு அமைச்சகம்

கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022 பற்றி ஓர் முன்னுரை

Posted On: 29 OCT 2022 5:15PM by PIB Chennai

நான்காவது கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில்  31 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2022 வரை நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நட்பு நாடுகளின்  கடற்படை, கடல்சார் பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த கேப்டன்கள், கமாண்டர்கள் மற்றும் அதற்கு இணையான நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட 

கோவா கடல்சார் கருத்தரங்கம், இந்தியாவிற்கும்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் நாடுகளுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை,  ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த தளமாக திகழ்கின்றது.

இந்த கருத்தரங்கம் கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.  மேலும் இந்த கருத்தரங்கத்தின் முந்தைய மூன்று நிகழ்வுகள் இதுவரை நடைபெற்றுள்ளது.

இந்த கருத்தரங்கத்தை கடற்படை போர் கல்லூரியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் திரு ராஜேஷ் தன்கர் தொடங்கி வைக்கிறார்.

21 ஆம் நூற்றாண்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு இந்திய பெருங்கடல் பிராந்தியம் ஒரு முக்கிய மையமானது. இதனைக்கருத்தில் கொண்டு

கடல்சார் களத்தில் விரிவான பாதுகாப்பிற்கான கொள்கைகள், நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒன்றிணைப்பதில் இந்த கருத்தரங்கம் முக்கிய பங்காற்றுகிறது.

கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022-யின்  கருப்பொருள் “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்கள்: கடல்சார் முக்கிய செயல்பாடுகளை ஒன்றாக இணைத்து கூட்டு கட்டமைப்பாக மாற்றுதல்” ஆகும்.

'பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி' (சாகர்) மற்றும் பாரதப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பின் ஐந்து கொள்கைகள், அதாவது நமது பிராந்தியத்தின் செழிப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் கருப்பொருள் விளக்கம் அளிக்கின்றது.

*********



(Release ID: 1871856) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Marathi , Hindi