எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்பதரு கூட்டாண்மை உச்சி மாநாடு-தொழில் முனைவோர் மையம் (சிஓஇ) தொழில்துறை 4.0 ஆர்ஐஎன்எல்-லில் நடைபெற்றது

Posted On: 29 OCT 2022 12:15PM by PIB Chennai

ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (ஆர்ஐஎன்எல்), மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய அரசு, ஆந்திரப் பிரதேச மாநில அரசு மற்றும் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் (எஸ்டிபிஐ) போன்றவைகள் இணைந்து கல்பதரு-தொழில்முனைவோர் மையத்தை (சிஓஇ) விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் உருவாக்கியுள்ளது.

ஆர்ஐஎன்எல்-லின் தொழில்முனைவோர் மையம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக கூட்டாண்மை உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை ஆர்ஐஎன்எல்-லில் நடைபெற்றது.

 

கல்பத்ரு- தொழில்முனைவோர் மையம் (சிஓஇ) தொழில்துறை 4.0-யின் தலைமை ஆலோசகரும், ஆர்ஐஎன்எல்-யின் தலைமை நிர்வாக  இயக்குனரும்மான திரு அதுல் பட் பேசுகையில், “எஃகு தொழில் மற்றும் பிற தொழில்கள் வளர்ச்சி அடைய நாடு முழுவதும் இருந்து பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை கல்பதரு- தொழில்முனைவோர் மையம் கொண்டு வரும்” என்றார்.

 

 

இந்திய எஃகுத் தொழில்துறைக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கான மையமாக இது இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் எஸ்டிபிஐ-யின் பொது இயக்குனர் திரு அரவிந்த் குமார், இந்த மையத்தோடு இணைந்து செயலாற்ற சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் முன்வந்து பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டார். 21வது தொழில்முனைவோர் மையமாக கல்பத்ரு திகழ்கிறது என்ற திரு அரவிந்த் குமார், இந்திய தொழில்துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இது தீர்வுகளை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் முடிந்தவரை பல ஸ்டார்ட் அப்களை ஆதரிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றார்.

 

விசாகப்பட்டினம் எஸ்டிபிஐ-யின் கூடுதல் இயக்குனர், டாக்டர். பி. சுரேஷ், கல்பதரு மையம் பற்றி சுருக்கமாக விளக்கி கூறினார்.

*********

MSV/GS/BD


(Release ID: 1871784) Visitor Counter : 155