பாதுகாப்பு அமைச்சகம்
காலாட்படையின் 76-வது தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடுகிறது
Posted On:
27 OCT 2022 1:04PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்ப்படையான காலாட்படையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டு தோறும் அக்டோபர் 27-ம் நாள் காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
1947-ஆம் ஆண்டு இதே நாளில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் படையான காலாட்படை வீரர்கள் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து படையெடுப்பாளர்களைத் திருப்பியனுப்பியதால், இந்த நாள் நாட்டில் தனித்துவமான நாளாக அமைந்தது.
2022-ம் காலாட்படை தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவிடமான தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முப்படைகளின் தளபதி ஜென்ரல் அனில் சவ்கான், ராணுவ துணைத்தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் பி எஸ் ராஜூ உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
விடுதலை அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் வந்திறங்கிய 76-ம் ஆண்டு நினைவாக உதம்பூர் (ஜம்முகாஷ்மீர்), அகமதாபாத் (குஜராத்), வெலிங்டன் (தமிழ்நாடு), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய நான்கு திசைகளில் இருந்து வந்த பைக் பேரணியை தேசிய போர் நினைவிடத்தில் முப்படைத் தளபதி கொடியசைத்து வரவேற்றார். காலாட்படை வீர்ர்களின் தியாகங்கள் மற்றும் துணிச்சலுக்காக மரியாதை செலுத்தும் வகையில் இந்த பைக் வீர்ர்கள் பத்து நாட்களில் 8000 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் செய்தனர். அப்போது வழியில் முன்னாள் படைவீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் மாணவர்களை சந்தித்து உரையாடினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871200
**************
MSV/IR/AG/SHA
(Release ID: 1871237)
Visitor Counter : 359