உள்துறை அமைச்சகம்

2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை இந்தியா சிறப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் 2022 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரத்தை நடத்துகிறது

Posted On: 26 OCT 2022 2:30PM by PIB Chennai

2021-ஆம் நடத்தப்பட்ட சிறப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் 2022 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரத்தை நடத்துகிறது. இதன் முதற்கட்டமாக (2022 செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 30 வரை) அமைச்சகத்தால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தூய்மைப் பிரச்சாரத்திற்காக 5,629 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், ஒருங்கிணைந்த சந்தை தொடர்பான பரிந்துரைகள், மாநில அரசின் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக பரிந்துரைகள், பொது பிரச்சினைகள் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மேல்முறையீடுகள் போன்ற நிலுவையில் உள்ள பல்வேறு கோப்புகள் களையப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரம் மத்திய ஆயுத படை காவலர்களால் லே முதல் இட்டாநகர் வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பிற இணைக்கப்பட்ட, கீழ்நிலை அலுவலகங்களும் தீவிரமாக பங்கேற்கின்றன. தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரம் குறித்து மத்திய ஆயுத படை காவலர் மற்றும் தில்லி காவல்துறையால் @PIBHomeAffairs அதிகளவில் ட்விட் செய்யப்படுகிறது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக PIB பக்கத்தில் ரீட்விட் செய்யப்படுகிறது.

தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரம் இலக்கை எட்டுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.                                                                                        

**********(Release ID: 1870971) Visitor Counter : 151